கூலி இசை வெளியீட்டில்.. சத்யராஜ் பகையை பற்றி பேசிய ரஜினி 

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முக்கிய திரைத்துறை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ரஜினிகாந்த் பேசி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கூலி படம் மீது பெரும் அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதற்குப் பின்னணி கலாநிதி மாறனும், லோகேஷ் கனகராஜுடன் எனது கூட்டணியும் தான் என்றார்.

ரஜினி லோகேஷின் 2 மணி நேர இன்டர்வியூவை நான் நின்னு, உட்கார்ந்து, படுத்துக்கிட்டு தூங்கிட்டு கேட்டேன், அவர் ரொம்ப டேலண்ட் என பாராட்டினார். அனிருத் இந்தியாவின் ராக் ஸ்டார் இளம் வயதில் இமயமலைக்கு போகும் அளவுக்கு அமைதியை தேடுகிறவர் என்றார்.

சாண்டி பற்றி பேசும் போது, நான் 1950 மாடல், ஆனா இன்னும் ஓடுது என நான் சொன்னேன். ஆனாலும் என்னை ஆட வைத்திருக்கிறார் என நகைச்சுவையுடன் பேசினார்.

சத்யராஜ் இப்படத்தில் நடிக்கிறார் என லோகேஷ் கூறினார். நான் அவர் நடிக்கிறாரா என்று அவரிடம் கேட்க சொன்னேன், அதற்கு அவர் “ரஜினிகாந்திடம் கேளுங்கள்” என்றார் என லோகேஷ் கூறினார். எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனாலும் அவர் மனதில் இருப்பதை நேராக சொல்வார். மனசுல இருப்பதை வெளிப்படையாக சொல்றங்களை நம்பலாம், ஆனா உள்ளயே வச்சிட்டு இருக்கவங்கள நம்ப முடியாது என கூறினார்

நாகர்ஜுனாவிடம் எனக்கு முடியெல்லாம் போயிடுச்சு இந்த வயசிலும் நீங்க அழகா இருக்கீங்க என்று நான் கேட்டதும் அவரோ உடற்பயிற்சி தான் ரகசியம்னு சிம்பிளா சொல்லிட்டார். அஜித்தின் மங்காத்தா டயலாக் போல நல்லவனாவே எவ்வளவு நாள் நடிக்கிறது என்பதற்கு ஏற்றார்போல் நாகர்ஜுனா நெகடிவ் ரோலில் செம மாஸாக நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

கூலி ஆடியோ லாஞ்சில் தன் நடிப்புப் பயணத்தை தன் நண்பர் ராஜ் பஹதூர் தங்கச் செயின் கொடுத்து துவக்கச் செய்தார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு உழைப்புடன் இறைவனின் குரலும் முக்கியம் என்றார்.

அந்த குரலை மனிதர்களின் குரலிலிருந்து பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணம், புகழ் இருந்தாலும் வீட்டு நிம்மதியும் வெளி கெளரவமும் இல்லையெனில் எல்லாம் வீண் என்றும் கூறினார் ரஜினி.