இந்த மாதம் 14ஆம் தேதி லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் கூலி படம் ரிலீஸ் ஆகிறது. அதனால் பல சின்ன படங்கள் ஆகஸ்ட் மாதம் ரிலீஸில் இருந்து வெளியேறியது. கூலி படத்தால் தியேட்டர்கள் கிடைக்காமல் 6 படங்கள் தவித்து வருகிறது.
War 2: ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது. இது பான் இந்தியா படமாக வெளிவருவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது.
ட்ரெயின்: இயக்குனர் மிஷ்கின், விஜய் சேதுபதியை வைத்து இரண்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் படம் ட்ரைன். ஆரம்பத்தில் இந்த படமும் ஆகஸ்ட் மாதம் தான் வெளிவரும் எனக் கூறியிருந்தனர். இப்பொழுது பின் வாங்கி விட்டார்கள்.
நூறு கோடி வானவில்: பார்க்கிங், லப்பர் பந்து என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தும் ஹரிஷ் கல்யாண் பொருளாதாரரீதியில் ஜெயிக்கவில்லை. 100 கோடி வானவில் படத்தை பெரிதும் நம்பி இருந்தார். இந்த படமும் ஆகஸ்ட் ரிலீசில் இருந்து தள்ளி போனது.
சீதா பயணம்: அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனனை வைத்து இயக்கியுள்ளார். சத்யராஜ், பிரகாஷ்ராஜ் போன்ற பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இதில் நடித்துள்ளனர். இந்த படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் என்று அறிவித்து இப்பொழுது பின் வாங்கி விட்டனர்.
விடியும் வரை காத்திரு- மிஸ்டர் ஜு கிப்பர்: இந்த இரண்டு படங்களும் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. விதார்த் மற்றும் விக்ராந்த் இருவரும் சேர்ந்து நடித்த படம் விடியும் வரை காத்திரு. விஜய் டிவி பிரபலம் புகழ் நடித்துள்ள படம் மிஸ்டர் ஜு கிப்பர். இந்த படமும் இம்மாதம் ரிலீஸ் ஆக இருந்தது இப்பொழுது தள்ளிப்போனது.