வார் 2-வை ஓரம்கட்டிய கூலி.. மாஸ் காட்டும் ரஜினி

Rajini : இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்த்த படம் தான் லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவான கூலி படம். இந்த படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் பிரமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் கூலி படத்திற்கு போட்டியாக வார் 2 படம் வெளியாகிறது. இதில் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் கூலி படத்தின் டிக்கெட்கள் 910k விற்பனையாகி இருக்கிறது.

இதை ஒப்பிடும்போது வார் 2 படம் 166k மட்டுமே விற்பனையாகி பின்தங்கி இருக்கிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி புதன்கிழமை இந்த படத்தின் பிரீமியர் ஷோ நடைபெற இருக்கிறது. அதன் பிறகு பாலிவுட் ரசிகர்கள் முன்பதிவு செய்ய ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார் 2 முன்பதிவை முந்திய கூலி

ஆனால் வார் 2 படத்திற்கு தெலுங்கு பதிப்பில் தான் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளது தான். மேலும் ரஜினி என்ற மாஸ் அந்தஸ்து காரணமாக கூலி படத்திற்கு முன்பதிவு அதிகமாக இருக்கிறது.

ஆனாலும் அதிக வன்முறை காட்சி இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதால் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வரும் வாரங்களில் கூலி படத்தில் பிசினஸ் குறைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் குழந்தையோடு சென்று இந்த படத்தை பார்க்க முடியாது.

ஆகையால் பல பெற்றோர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்ததை தவிர்க்க கூடும். எனவே படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருப்பதால் அதை பொருத்து தான் வெற்றி யாருக்கு அதிகம் இருக்கிறது என்று தெரிய வரும்‌.