உங்க ஆர்வக்கோளாருக்கு அளவே இல்லையா.. உச்ச நடிகருக்காக விசுவாசிகள் செய்யும் வேலை

Gossip: பல தலைமுறைகளை பார்த்து வரும் உச்ச நடிகர் இப்போதும் அதே இடத்தில் தான் இருக்கிறார். இதற்கு காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் பலம் தான். ரசிகர்கள் என்று சொல்வதை விட வெறியர்கள் என்று சொல்லலாம்.

அவர் மீது வெறித்தனமான அன்பை காட்டும் ரசிகர்கள் இருக்கும் போது அவருக்கு என்ன கவலை. அவருடைய படம் பல சாதனைகளை செய்துவிடும். அப்படித்தான் இந்த வெறியர்களின் ஆர்வத்துக்கு அளவே இல்லையா என்பது போல் ஒரு விஷயம் நடக்கப் போகிறதாம்.

அதாவது நடிகர் நடித்துள்ள அந்த பெரிய படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட நடிகரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். விழாவுக்கு வந்தவர்கள் கூட ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.

உச்ச நடிகருக்காக விசுவாசிகள் செய்யும் வேலை

அதிலும் தயாரிப்பாளர் ஒரு படி மேலே போய் கூடை நிறைய ஐசை தூக்கி நடிகர் தலையில் வைத்தார். இதெல்லாம் எதற்கு வசூலுக்காக தான். இப்படி எல்லாம் பிரமோஷன் செய்தால்தான் ஆயிரம் கோடி அடிக்க முடியும் என்பதால் தான் இந்த அளப்பறை.

இது ஒரு பக்கம் இருக்க நடிகரின் ரசிகர்கள் கூட்டம் 1000 கோடி அடிக்க சிறப்பு பூஜை நடத்தப் போகிறார்களாம். ஆயிரம் ஆடுகளை வெட்டி அசைவ உணவுகள் சமைத்து பொதுமக்களுக்கு கொடுக்கப் போகிறார்களாம்.

இப்படி எல்லாம் செய்தால் படம் வெற்றி பெற்று விடுமா எங்க இருந்துடா வரீங்க என விஷயத்தை கேள்வி பட்டவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். இன்னும் என்னெல்லாம் பார்க்கணுமோ என கோடம்பாக்கம் வட்டாரத்தில் புலம்பலும் கேட்கிறது.