அஜித் உடன் 25 வருடம் கழித்து இணையும் கூட்டணி.. வாய்ப்பிற்காக வரிசைகட்டும் இயக்குனர்கள்

Ajith : நடிகர் அஜித்குமார் தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் வைத்திருக்கும் படங்களை பார்த்தாலே “2035” வரை படத்திற்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் இவரிடம் கதை சொல்லிவிட்டு வாய்ப்பிற்காக சில இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஏ ஆர் முருகதாஸ் , சிறுத்தை சிவா ஆகியோரும் உள்ளனர்.

தீனா-க்கு பிறகு இணையும் கூட்டணி..

ஏ ஆர் முருகதாஸ் இயக்கியது சில படம்தான் என்றாலும் அந்த படங்கள் எல்லாம் இன்று வரை நின்று பேசுகின்றன. சிறுத்தை சிவாவும் கிட்டத்தட்ட அப்படித்தான். இவங்க ரெண்டு பேரும் மற்றும் சில இயக்குனர்களும், அவர்களோடு அனிருத்-ம் இணைந்து போய் நண்பர்கள் தினத்தன்று “அஜித்தை” சந்தித்துள்ளார்கள்.

இந்த சந்திப்பில் அஜித்திடம் கதைகள் சொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏ ஆர் முருகதாஸ் தற்போது இயக்கிய “மதராஸி” படம் வெளிவந்ததும், படத்தை பார்த்துவிட்டு அஜித் ஏ ஆர் முருகதாஸ் கதைக்கு ஓகே சொல்லப்போறாராம் எனவும் பேசிக்கிறாங்க.

இதற்கு அடுத்து“சிறுத்தை சிவா”-வும் கதை அஜித்திடம் சொல்லிருக்கதாகவும் பேசிக்கிறாங்க. எல்லாம் ஓகே ஆனால் இவங்களோட ஏன் அனிருத் போயிருக்காங்கனு பார்த்தா? வேதாளம், விவேகம், விடாமுயற்ச்சி இந்த படத்திற்கு இசையமைத்த அனிருத், மீண்டும் அஜித் படத்திற்கு இசையமைக்க போறாராம். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கதா தகவல் கசிந்து வருகிறது.

ஏதோ பெருசா சம்பவம் செய்யப்போறாங்க. அதிகாரபூர்வமான தகவலுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம். விஜய்யும் இனிமேல் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு, அப்போ இனிமேல் நடிகர்கள் காட்டில் மழைதான், என்று உற்சாகத்தில் உள்ளனராம் சில நடிகர்கள்.