சஸ்பென்ஸ் குறையாமல் திகில் ஊட்டும் வகையில் போய்க் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது. ஒரு பக்கம் பிரச்சினை வேண்டாம் என தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கனடா புறப்படும் பார்கவி. அவரை வழி அனுப்ப துடிக்கும் ஜீவானந்தம் என காட்சிகள் நகர்கிறது.
இங்கே வீட்டில் தர்ஷனுக்கும் பார்கவிக்கும் கல்யாணம் செய்து வைக்க போராடி வருகிறார்கள் எதிர்நீச்சல் போடும் பெண்கள். ஆனால் பார்கவி எதிர்காலம் தான் முக்கியம் என கனடா செல்வதற்கு ஜனனி முதல் ஈஸ்வரி வரை பச்சைக்கொடி காட்டினாலும் விதி விடுவதாக இல்லை.
குணசேகரன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரிக்கு தள்ளுமுள்ளு நடந்தது. இதில் குணசேகரனை, “நீங்கள் ஒரு மனிதனை கிடையாது செத்துப் போகலாம்” என கோபத்தில் பத்ரகாளியாய் ஈஸ்வரி கொந்தளித்து பேசுகிறார். ஆத்திரம் தலைக்கேறிய குணசேகரன் “நீ முதலில் செத்துப் போ” என கழுத்தை நெரிக்கிறார்.
கழுத்தை பிடித்து சுவற்றில் மூட்டுகிறார் குணசேகரன். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரை காப்பாற்ற ஆள் இல்லை. வழக்கம் போல் நந்தினி கதவை தட்ட முற்படுகிறார். ஆனால் கதவு இடையே வந்த ரத்தத்தை பார்த்து பயத்தில் உள்ளே செல்கிறார்.
கதிர், குணசேகரன், கரிகாலன் என யாரும் உதவிக்கு வராத நிலையில் பெண்கள் மற்றும் தர்ஷன். அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். கார் சாவிகளும் ஒழித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோவில் செல்கிறார்கள்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர், அவர் நினைவு திரும்புவது கடினம். கோமா நிலைக்கு செல்ல உள்ளார் என கூறிவிட்டார். முதற்கட்டமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சொல்கிறார். அவரை சாகாமல் சாகடித்து விட்டார் குணசேகரன்.