Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி லாக்கப்பில் இருந்து வெளியே வந்த பிறகு இனியாவிடம் நடந்த எல்லா அசம்பாவிதங்களும் மறந்து இனி சந்தோஷமான வாழ்க்கையை நீ வாழ வேண்டும். உனக்கு நான் எப்பொழுதுமே துணையாக இருப்பேன், உன் கூட நம்முடைய குடும்பம் இருக்கும் என்று தன்னம்பிக்கையாக பேசி ஆறுதல் படுத்துகிறார்.
அந்த வகையில் இனியாவும் எல்லாத்தையும் மறந்து விட்டு வேலைக்கு போவதற்கு தயாராகி விட்டார். பிறகு சுதாகருக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் கிடைத்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் ஐந்து விஷயங்கள் வெற்றிகரமாக நடைபெறுகிறது. ஹோட்டலை இழந்த பாக்கிய அதை மீட்டு தொழிலை மீண்டும் துவங்குகிறார்.
அடுத்ததாக அமிர்தா வீட்டிற்கு வந்த நிலையில் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற சந்தோஷமான விஷயத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்கிறார். இதற்காகத்தான் இத்தனை நாளாக நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று ஈஸ்வரி சந்தோஷப்பட்டு அமிர்தாவை தாங்குகிறார்.
அடுத்ததாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஜெனி சமையல் ரெடி, வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடும் போது அனைவரும் பயத்துடனே வந்து சாப்பிட உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆனால் ஜெனி சமைத்து சாப்பாடை சாப்பிட்டதும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். அந்த அளவிற்கு சமையலில் அசத்தும் செஃப் ஜெனியாக மாறிவிட்டார்.
இதனை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஏழையாக இருந்தாலும் படிப்பு மட்டுமே அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தும் என்று சொல்வதற்கு ஏற்ப ஆகாஷ் கலெக்டர் படிப்பை முடித்துவிட்டு காஞ்சிபுரம் துணை ஆட்சியர் ஆகும் அளவிற்கு ஜெயித்து விட்டார். இதை எல்லாம் கேட்ட ஈஸ்வரி, இனியாவிற்கு ஆகாஷை கல்யாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதே மாதிரி ஆகாஷ் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் நன்றாக பேசி ஒன்றாக உட்கார வைத்து சாப்பாடுகளை கொடுத்து பரிமாறுகிறார்கள். இதை பார்த்து செல்வி மற்றும் ஆகாஷ் கண்கலங்கி போய்விட்டார்கள். அடுத்து செல்வி தைரியமாக ஈஸ்வரிடம் என் மகன் கலெக்டர் ஆகாஷுக்கு உங்க வீட்டு இனியா பாப்பாவை கல்யாணம் பண்ணிக் கொடுப்பீர்களா என்று கேட்கிறார். அந்த வகையில் எல்லாருடைய சம்மதத்துடன் இனிய ஆகாஷ் கல்யாணம் நடைபெறுகிறது.