நடுத்தெருவில் நிற்கப்போகும் மனோஜ் ரோகினி.. மீனாவை தங்கத்தட்டில் வைத்து தாங்கும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், நடந்த எல்லா பிரச்சனைக்கும் விஜயா தான் காரணம் என்று அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். இதனால் குடும்பத்தின் முன் விஜயா அவமானப்பட்டு நிற்பதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக போய்விடுகிறார்.

பிறகு விஜயா தூங்காமல் முழித்துக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அறிவுரை சொல்லும் விதமாக இந்த குடும்பத்தில் இருப்பவர்களிடம் பாசத்தை காட்டி இந்த குடும்பத்துக்கு பெருமை சேர்க்கும்படி எதையாவது உருப்படியா செய் என்று சொல்கிறார்.

உடனே விஜயா, பார்வதியை கூட்டிட்டு கோவிலுக்கு போகிறார். அப்பொழுது பார்வதி, தோழி ஒருவரை சந்தித்து பேசுகிறார். அவர் கிளப்பில் மெம்பராக இருப்பதால் நல்ல விஷயங்களை செய்து வருபவர்களுக்கு டாக்டர் பட்டத்தை கொடுத்து கௌரவித்து வருவதாக பார்வதி, விஜயாவிடம் சொல்கிறார். இதை கேட்டதும் பேராசைப்பட்ட விஜயா நமக்கும் அந்த பட்டம் வேண்டும் என்று நினைக்கிறார்.

அதனால் பார்வதியின் தோழியை சந்தித்து பேசுகிறார், அவர் விஜயாவிடம் நீங்கள் இதுவரை என்ன நல்லதெல்லாம் பண்ணி இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா ஏழை வீட்டு குடும்பத்தில் இருந்து மீனாவை முத்துக்கு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததாகவும், ஆதரவே இல்லாமல் தனியாக இருந்த க்ரிஷ் என்கிற பையன் என் வீட்டில் வளர்கிறான் என்பதையும் சொல்கிறார்.

அதற்கு அந்த நபர் இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார். விஜயா இல்லை என்று சொன்னதும் இனிமேல் செய்ய போற நல்ல விஷயங்களை வீடியோவுடன் ஆதாரத்தை கொண்டுட்டு வாங்கள் பார்க்கலாம் என்ன சொல்லிட்டு போய்விடுகிறார். உடனே இதை செய்து காட்டும் விதமாக வீட்டிற்கு வந்த விஜயா மீனாவை என்னுடைய மருமகளை தங்கமான மருமகளை என்று கூப்பிட்டு பட்டுப் புடவையை கொடுத்து பாசமாக பேசுகிறார்.

இதெல்லாம் எதற்கு என்று தெரியாமல் மீனா அப்படியே மிதக்க ஆரம்பித்து விட்டார். முத்து இதெல்லாம் கனவா நினைவா என்று திகைத்து போய் பார்க்கிறார். ஸ்ருதி அத்தை உடம்புக்குள் பேய் ஏதும் புகுந்துட்டதா என்று ரவியிடம் கேட்கிறார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நின்று இருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் வீடியோவுக்காக தான் என்று இனிமேல் தான் தெரிய வரப்போகிறது.

அடுத்ததாக மனோஜ் ஷோரூம் இல் புதுசாக சேர்ந்திருந்த ராஜா ராணி என்ற தம்பதிகள் கொடுத்த ஐடியாவின் படி தவணை முறையில் பொருட்களை வாங்கலாம் என்று நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள். அதன்படி எக்கச்சக்கமான கூட்டம் வந்து முதல் தவணையாக பணத்தை கொடுத்துவிட்டு போகிறார்கள். லட்சக்கணக்கில் மனோஜ்க்கு பணம் சேர்ந்ததால் அதை கடையில் இருக்கும் ஒரு லாக்கரில் வைத்து விடுகிறார்.

இந்த பணத்தை எல்லாம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகினி ரொம்பவே சந்தோசத்தில் நிற்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்னாடி ராஜா ராணி வைக்கப்போகும் ஆப்பு என்னவென்றால் இந்த பணத்தை எல்லாம் அங்கே தாங்கிக் கொண்டிருந்து சுருட்டிட்டு போகப் போகிறார்கள். கடைசியில் மாத தவணைக்கு பணம் கொடுத்தவர்களிடம் தர்ம அடி வாங்கி நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள்.