ஏன் அஜித் தேவையில்லாத பில்டப்? உண்மையை சொல்லுங்க, அட்வைஸ் செய்த பிரபலம்

Ajith : நடிகர் அஜித் சினிமாவிற்கு எந்த பின்புலமும் இல்லாமல் வந்த நடிகர். ஒவ்வொரு இடத்திலும் தன்னை கஷ்டப்பட்டு முன்னிறுத்தி இன்றுவரை சினிமாவில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று நிலைத்து நிற்கிறார்.

சாதாரண மெக்கானிக்-காக இருந்து இன்று இந்த உச்சத்தை அடைந்த அஜித்தை பல இளைஞர்கள் “ரோல் மாடல்” ஆகவும் பின்பற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட அஜித் நான் தானாக கஷ்டப்பட்டு மேல் வந்தவன் “தன்னைத்தானே செதுக்கிக்கொண்டேன்” என்று சில இடங்களில் கூறியிருப்பார்.

ஏன் அஜித் தேவையில்லாத பில்டப்..

இதை தற்போது வலைப்பேச்சு பிஸ்மி அளித்த நேர்காணல் ஒன்றில் “தன்னைத்தானே செதுக்கிக்கொண்டேன்” என நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இல்லை என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள்ளது.

பல இடங்களில் பாடகர் S.B.பாலசுப்ரமணியன் அஜித் அவர்களுக்கு முக்கியமான காலகட்டத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார் எனவும் பிஸ்மி கூறியுள்ளார். “ஆசை” படத்திற்கு ஹீரோ தேடிய பொது S.B.பாலசுப்ரமணியன் தான் அஜித்தை இயக்குனர் வசந்த்திடம் சொல்லி ஹீரோ ஆக்கினாராம்.

அதுமட்டுமல்லாமல் S.B.பாலசுப்ரமணியன், தன் மகன் S.B.P சரண்-க்கு வந்த வாய்ப்பை கூட S.B.பாலசுப்ரமணியன் அஜித்திற்கு வழங்கியுள்ளார். இவ்வாறு S.B.பாலசுப்ரமணியன் அஜித்துக்கு உதவுவதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை, ஆனால் இந்த உதவியை செய்துள்ளார் என பிஸ்மி கூறியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் தனக்கு உதவிய S.B.பாலசுப்ரமணியன் அவர்களை ஏன் அஜித் இதுவரை வெளியில் சொல்லவில்லை என்ற கேள்வியையும் முன்வைத்து, “தன்னைத்தானே செதுக்கிக்கொண்டேன்” என இனிமேல் கூறுவதை நிறுத்திவிட்டு உண்மையை கூறுங்கள் என AK-க்கு அட்வைஸ் செய்துள்ளாராம் பிஸ்மி.