ஆகாஷ் உடன் புது வாழ்க்கையை ஆரம்பித்த இனியா.. மயூவை கூட்டிட்டு வரும் ராதிகா

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஆகாஷ் சப் கலெக்டராகி விட்டார் என்ற பெருமையுடன் செல்வி, பாக்யா வீட்டிற்கு ஆகாஷை கூட்டிட்டு வருகிறார். பாக்யா வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஆகாஷை வரவேற்று சாப்பிட சொல்கிறார்கள். ஆகாஷ் தயக்கத்துடன் இருந்த பொழுது ஈஸ்வரி, ஆகாஷை சமமாக உட்கார வைத்து சாப்பிட வைத்து விட்டார்.

அதன் பிறகு ஈஸ்வரி மனதில் இருக்கும் ஆசையை கேட்கும் விதமாக இனியாவிற்கும் ஆகாசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா என தயக்கத்துடன் இருக்கிறார். ஆனால் பாக்யா வேண்டாம் என்று சொல்லிய நிலையில், செல்வி அங்கிருந்து கிளம்பும்பொழுது ஆகாஷை கூட்டிட்டு ஈஸ்வரிடம் இனிய பாப்பாவும் ஆகாசும் காதலிக்கும் பொழுது எதுவும் கேட்க முடியாத நிலைமையில் நான் இருந்தேன்.

ஆனால் இப்பொழுது நான் அப்படி இல்லை, கலெக்டருடைய அம்மா என்கிற முறையில் நான் கேட்கிறேன். இனிய பாப்பாவுக்கும் ஆகாசுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு சம்மதமா என்று கேட்கிறார். உடனே இதைத்தான் நானும் கேட்க நினைத்தேன் என்று ஈஸ்வரி சொல்கிறார். அந்த வகையில் இனியாவிற்கும் ஆகாசுக்கும் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்து ரிசப்ஷன் தயாராகிவிட்டது.

இதில் கலந்து கொள்வதற்கு சுதாகரின் மனைவி நித்தேஷின் அம்மா வந்து இனியாவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு போகிறார். அதோடு இந்த கல்யாணத்திற்கு ராதிகாவும் மயூவை கூட்டிட்டு வருகிறார். அந்த வகையில் இனியா ஆகாஷ் உடன் புது வாழ்க்கையை ஆரம்பித்து விட்டார். எழில் அமிர்தா வேலை விஷயமாக வெளிநாடு போய் விடுகிறார்கள்.

அடுத்ததாக செழியனும் மாமனாரின் பிசினஸை நடத்துவதால் ஜெனியை கூட்டிட்டு மாமனார் வீட்டுக்கு போய்விட்டார். அடுத்து வீட்டில் ஈஸ்வரி பாக்கியம் மட்டும் தனியாக இருந்த பொழுது ஈஸ்வரி, பாக்யாவிடம் கேட்டது என்னவென்றால் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அவங்க அவங்க வாழ்க்கையே பார்த்து வாழ போய்விட்டார்கள். இப்பொழுது தனியாக இருக்கும் நீயும் கோபியும் ஒன்று சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என பாக்கியாவிடம் கேட்கிறார்.