Hansika motwani : ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்பு குறைந்த நிலையில் சோஹைல் கட்டாரி என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்த தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. அதுவும் குறிப்பாக திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஹன்சிகா தனது தோழியின் கணவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த சமயத்தில் பல சர்ச்சைகளும் எழுந்திருந்தது. இப்போது விவாகரத்து செய்தி வந்த நிலையில் ஹன்சிகா அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.
கணவரின் புகைப்படத்தை நீக்கிய ஹன்சிகா
இந்த சூழலில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கி இருக்கிறார். சமீபகாலமாகவே பிரபலங்கள் விவாகரத்து செய்தால் முதலில் சமூக வலைத்தளங்களில் தங்களது ஜோடிகளின் புகைப்படத்தை நீக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
அவ்வாறு தான் ஹன்சிகாவும் கணவரின் புகைப்படங்களை நீக்கி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஹன்சிகாவின் கணவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் அவரை பிரிந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
ஆனால் ஹன்சிகா தரப்பிலிருந்து இதற்கு தெளிவான விளக்கம் வந்தால் தான் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும் இப்போது கணவனின் போட்டோவை ஹன்சிகா நீக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.