71-வது தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களையும், அவை வெளியாகியுள்ள ஓடிடி தளங்களையும் இங்கே பார்க்கலாம்.
பார்கிங் சிறந்த தமிழ் படம் உள்ளிட்ட மூன்று விருதுகள் பெற்றது. வாத்தி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றுள்ளார். இந்த இரு படங்களும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. உள்ளொழுக்கு படத்துக்காக ஊர்வசி சிறந்த துணை நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.
பார்கிங் முதல் 12th Fail வரை
ஜவான் படத்துக்காக ஷாருக்கான் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இதை பார்க்கலாம். 12th ஃபெயில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. சாம் பகதூர் சமூக விழிப்புணர்வுடன் கூடிய படம் மூன்று பிரிவுகளில் வென்றுள்ளது. இதை ஜீ 5 ல் பார்க்கலாம்.
பேபி படத்துக்காக சிறந்த பாடகர் மற்றும் சிறந்த திரைக்கதை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஆஹா தளத்தில் வெளிவந்துள்ளது. ஹனு-மேன் சிறந்த அனிமேஷன் மற்றும் சண்டைப் பயிற்சி விருதுகளை வென்றுள்ளது. பகவந்த் கேசரி சிறந்த தெலுங்கு படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவைகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
பூக்காலம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வந்துள்ளது. இந்த படத்துக்காக விஜயராகவன் சிறந்த துணை நடிகர் விருது பெற்றுள்ளார். 2018 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்காக விருது பெற்றுள்ளது. சோனி லைவ் இல் பார்க்கலாம். காந்தி தாத்தா சேட்டு தெலுங்கு படமான இதற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
Naal 2 மற்றும் ShyamChi Aai ஆகிய மராத்தி படங்கள் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் மொழிப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Godday Godday Chaa சிறந்த பஞ்சாபி மொழி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 படங்களையும் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். Aatma Pamphlet சிறந்த அறிமுக இயக்குநராக ஆஷிஷ் அவினாஷ் தேர்வு பெற்றுள்ளார். இதை ஜீ 5 ல் பார்க்கலாம்.
Animal நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம். சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் பின்னணி இசை பிரிவுகளில் வெற்றி பெற்றது. Sirf Ek Bandaa Kaafi Hai சிறந்த வசனம் பிரிவில் விருது பெற்றுள்ளது. இதை ஜீ 5 ல் பார்க்கலாம். The Kerala Story படம் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவுக்காக விருதுகளை பெற்றுள்ளது. Sam Bahadur படம் சிறந்த ஆடை மற்றும் ஒப்பனை பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவைகளை ஜீ 5 ல் பார்க்கலாம்.
Rocky Aur Rani Ki Prem Kahaani அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படம், நடன இயக்கம் விருதுகளை பெற்றுள்ளது. புஷ்கரா Tarang Plus ல் பார்க்கலாம். சிறந்த ஒடியா மொழி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கதல் சிறந்த இந்தி படம் விருது பெற்றது. இது நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்துள்ளது. வாஷ் சிறந்த குஜராத்தி மொழி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஷெமாரூமே தளத்தில் கிடைக்கின்றன.