எதிர்நீச்சல் தொடர்கிறது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.குணசேகரனால் தாக்கப்பட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே நினைவில்லாமல் கோமாவில் இருக்கிறார். எல்லாருக்கும் விஷயம் தெரிந்து மருத்துவமனையில் கூடுகிறார்கள்.
ஆனால் குணசேகரன் கடைசி தம்பி சக்தி எங்கே போனார் என்பதே தெரியவில்லை. குணசேகரன் இல்லத்தில் பெண்களுக்கு சப்போர்ட் செய்யும் முக்கியமான கதாபாத்திரம் சக்தி. ஆனால் அண்ணியார் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் சுற்றி வருகிறார். ஜீவானந்தம் அவரை மறைத்து வைத்து காய் நகர்த்துகிறார்.
ஈஸ்வரியின் மாமியார் விசாலாட்சி அவர் மீது கரிசனம் கொண்டு மருத்துவமனைக்கு பார்ப்பதற்கு செல்ல முற்படுகிறார் ஆனால் அம்மாவை தடுத்த குணசேகரன் எங்களையும், இந்த வீட்டையும் தலை மூழ்கிவிட்டு போ என தன்னுடைய அதிகாரத்தை காட்டி அவரை அடக்கி வைக்கிறார்.
இதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து குணசேகரின் வலதுகரமான தம்பி கதிர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் பார்க்கும் பார்வையில் இருந்து அண்ணன் குணசேகரனை கண்டு பயப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சொத்துக்காக ஆசைப்பட்டாலும் மனைவி மகள் விஷயத்தில் கதிர் நல்லவர்தான்.
இப்பொழுது அம்மாவை அழைத்துக் கொண்டு குணசேகரனுக்கு தெரியாமல் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார் கதிர். அண்ணன், அண்ணியவே இப்படி செய்துவிட்டாரே என கதிர் மனதுக்குள் பொங்குகிறார். அண்ணனுக்கு எதிராக கூடிய விரைவில் மாறப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது. சக்தியும் கதிரும் சேர்ந்து அண்ணனுக்கு சரியான பாடம் புகட்ட உள்ளனர்.