Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் வீட்டுக்கு வந்த பிறகு நிலா என்னாச்சு என்று கேட்கிறார். அப்பொழுது சோழன் நகையும் பணத்தையும் எடுத்துட்டு போகும்பொழுது என்னை வழி மறைத்து என்னிடம் இருந்த நகையை எடுத்துட்டு போய் என்னை கட்டிப்போட்டு வைத்து விட்டார்கள். இதனால் அங்கிருந்து தப்பிப்பதற்காக அங்கு இருந்த போன் மூலம் என்னுடைய அண்ணனுக்கு போன் பண்ணி இருக்கும் அட்ரஸை சொன்னேன்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அடியாட்கள் என்னை வேறொரு இடத்துக்கு கொண்டுட்டு போயி என் கதையை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். அப்படி போகும் பொழுது என்னுடைய அண்ணனும் தம்பியும் காருக்குள் நான் இருப்பதை பார்த்துவிட்டு என்னை காப்பாற்றி விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனாலும் தாஸ், நீ சொல்வது பொய் நகையும் பணத்தையும் நீ தான் எடுத்திருப்பாய் என்று பலி போட ஆரம்பித்து விட்டார்.
பிறகு சோழன், பாண்டியனை கூப்பிட்டு நடந்த உண்மையை அந்த அடியாட்கள் மூலம் சொல்ல வைத்ததும் மனோகர் இதற்கெல்லாம் காரணம் மனோகர் தான் என்று நிலாவுக்கு தெரிந்து விட்டது. இதற்கு கூட்டணியில் தாசும் பிளான் பண்ணி இருக்கிறார் என்பதால் மொத்த குடும்பத்தையும் வெறுக்கும் விதமாக இனி நான் செத்தாலும் இந்த வீட்டுக்கு வரமாட்டேன். நீங்களும் என்னை தேடி யாரும் வர வேண்டாம் என்று சொல்லி சோழனை கூட்டிட்டு வெளியே கிளம்பி விடுகிறார்.
அப்பொழுது பல்லவன் இவங்க செஞ்ச தப்புக்கு நம்ம தண்டனை வாங்கி கொடுத்து இருக்கணும். ஏனென்றால் இவர்களால் சோழன் அண்ணன் உயிர் போக பார்த்தது என்று சொல்கிறார். ஆனால் சேரன் அதெல்லாம் வேண்டாம் அவங்க செஞ்ச தவறுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். நாம் எதுவும் பண்ண வேண்டாம் என்று சொல்லி கிளம்புகிறார்.
நிலவும் 23 வருஷமா உங்க கூட இருந்ததை விட இவங்க வீட்டில் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் நான் இருந்து தான் அதிகம். எனக்கு இவங்கள்தான் முக்கியம் என்று சோழன் சேரன் பாண்டியன் பல்லவனே கூட்டிட்டு நிலா கெத்தாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அந்த வகையில் நிலா இனி சோழன் குடும்பம் தான் நம்முடைய குடும்பம் என்று நினைத்து அந்த குடும்பத்தை ஊர் மக்கள் பாராட்டும் படி தூக்கி நிறுத்த வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் செய்து காட்டப் போகிறார்.