விளம்பரத்திற்கு ஒன்று, நிஜத்திற்கு ஒன்று.. நம்பி ஏமாறும் மக்கள்

Cinema : தினமும் காலை எழுந்து, இரவு தூங்கும் வரை நாம் என்னன்ன பொருள் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுப்பதே விளம்பரத்தை பார்த்துதான். அப்படிப்பட்ட விளம்பரத்தை நாம் ரசித்து பார்ப்பதற்கு காரணமே நமக்கு பிடித்த பிரபலங்கள்தான்.

அந்த பிரபலங்கள் விளம்பரத்திற்காக ஒன்றும், நிஜ வாழ்க்கை என்று வரும்போது அவர்கள் பயன்படுத்துவதே வேறு என பெரும்பாலும் நமக்கு தெரியும். அப்படிப்பட்ட சில பிரபலங்களையும், விளம்பரத்தையும் பார்க்கலாம்.

விளம்பரத்திற்கு ஒன்று, நிஜத்திற்கு ஒன்று..

Munch & pepsi : நடிகை சமந்தா, ராஷ்மிகா மந்தனா மற்றும் சில பிரபலங்கள் “munch”, “pepsi” போன்ற விளம்பரத்தில் நடித்துள்ளார். நிஜத்தில் இதை சாப்பிடுவார்களா? நல்ல ஆரோக்யமான உணைவையும், உடற்பயிற்சியையும் செய்து உடம்பை பாதுகாத்து கொள்கிரார்கள் இந்த பிரபலங்கள்.

7up : பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா மற்றும் இவருடன் இணைந்து அனிருத்தும் “7up” விளம்பரத்தில் நடித்திருப்பார்கள். நிஜத்தில் இவர்கள் இதை தொட்டு பார்ப்பார்களா என்பது சந்தேகமே.

BRU, Sunrise : பிரபலமாக விற்பனையாகி கொண்டிருக்கும் காபிதூள். இதற்கு கீர்த்தி சுரேஷ் , காஜல் அகர்வால், போன்ற நிறைய பிரபலங்கள் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர். நிஜத்தில் இவர்கள் மூலிகை டீ, அவர்களுக்கு ஏற்றமாதிரி உணவுகள் என உடம்பை பாதுகாத்து கொள்கிறார்கள்.

Boost : இந்த BOOST விளம்பரம் நன்றாக பிரபலமான விளம்பரம். இதில் கிரிக்கெட் பிரபலங்கள் “டோனி”, “விராட் கோலி”, “சச்சின் டெண்டுல்கர்” போன்றவர்கள் நடித்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்களின் உடம் வலிமைக்கு இதைத்தான் பயன்படுத்துகிறார்களா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. அவர்கள் “டயட் புட்” பின்பற்றுபவர்கள்.

“kurkure”, “lays”, “mountain dew” இதுபோல எக்கச்சக்கமான விளம்பரங்களையும், பிரபலங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இவர்கள் செய்யும் விளம்பரங்கள் பெரிய நம்பிக்கை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றன.

நிஜத்தில் இவர்கள் இதையெல்லாம் பயன்படுத்திவிட்டு எந்த பக்கவிளைவுகளும் இல்லை என கூறுவார்களா? என சில சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனராம். பணம் என்று பார்க்காமல், உண்மையான அக்கறையுடன் நடந்து கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் சில பிரபலங்களுக்கு அட்வைஸ் செய்தும் வருகிறார்களாம்.