சிறப்பான சம்பவத்தை அடக்கி வாசிக்கும் லோகேஷ்.. 2 மாதத்துக்கு முன் ஏற்பட்ட சலசலப்பு

கூலி படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு இது வழக்கமான ரஜினியின் கமர்சியல் படங்களில் ஒன்று என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒட்டுமொத்த படத்தையும் ட்ரெய்லரில் கணித்து விடும்படி தான் வெளியிட்டிருந்தனர் படக் குழு .

ஆரம்பத்தில் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் பெற்று தரும் என்றெல்லாம் இதற்கு ஹைப் எகிறியது. ஜெயிலர் படம் 650 கோடிகள் வசூலித்து விட்டது. அதனால் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் அதை முறியடிக்க இந்த படத்தில் செய்ய வேண்டியதை செய்வார்கள் என ஒரு டாக் வந்தது.

அதற்கேற்றார் போல் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். 30 வருடங்களுக்குப் பின் சத்யராஜ்,ரஜினி சேர்ந்து நடிக்கிறார்கள். இதனால் படத்திற்கு வருகிற செய்தி எல்லாம் ஓவர் பில்டப் கொடுத்தது. இப்படி எதிர்பார்ப்பு அதிகரித்ததால் ஆபத்து என லோகேஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

படத்தை பார்க்கும் யாரும் இதை “டி கோடிங்” செய்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். சூட்டிங் ஸ்பார்ட்டில் கண்டிப்பாக மொபைல் யூஸ் பண்ணுவது தவிர்க்கப்பட்டது. முக்கியமான சீன்களை எல்லாம் மிகவும் சீக்ரட்டாக எடுத்தார்கள். இப்பொழுது கூட டிரைலர் விஷயத்திலும் அதை தான் கையாண்டிருக்கிறார்கள்.

உபேந்திரா, அமீர்கான் வரும் காட்சிகள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்பது ஹிட்டன் சீக்ரட்டாக இருக்கிறது. சத்யராஜ், ரஜினியின் நண்பர் என்பது தெரிகிறது. அதை போல் நாகர்ஜுனா வில்லன் என்பதும் தெரிகிறது. மற்றபடி எதையும் சொல்லாமல் இதை ஒரு கமர்சியல் படமாக காட்டி ஹைப்பை இறக்கியுள்ளார் லோகேஷ்

எல்லாத்துக்கும் மேலாக 2 மாதங்களுக்கு முன்பு ரிலீசான தக்லைப் படத்திற்கும் இப்படித்தான் ஓவர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர். இதனாலேயே மணிரத்தினம், கமல், சிம்பு, காம்போ கைகூடாமல் போனது. இதையும் யோசிப்பதாலையும் அவர்கள் படத்திற்கு ஓவர் ப்ரோமோஷன் கொடுக்கவில்லை.