அரசியின் நிம்மதியான வாழ்க்கைக்கு பாண்டியன் செய்த சம்பவம்.. கடுப்பில் சக்திவேல் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தனக்குத்தானே தாலி கட்டி குமரவேலு வீட்டில் வாழ்ந்ததால் ஊர்காரங்க எல்லாரும் அரசியை தப்பாக பேசுகிறார்கள். இதனால் பயந்துபோன அரசி வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்தபடி இருக்கிறார். இதனால் கோமதியும் அவ்வப்போது கோவப்பட்டு எரிச்சலையும் அரசி மீது காட்டி வருகிறார்.

இதை எல்லாம் பார்த்த பாண்டியன் இதற்கு இப்பொழுதே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்து பொறுப்பான அப்பாவாகவும், மகள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அப்பா இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பாண்டியன் சம்பவத்தை செய்து வருகிறார். அதாவது மைக் போட்டு என் மகள் மீது எந்த தவறும் இல்லை.

அப்படி இருக்கும் பொழுது அவளை ஏன் வீட்டுக்குள்ளே அடக்கி வைக்கும் விதமாக நீங்கள் கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுகிறீர்கள். உங்களுக்கு யாருக்கு என்ன சந்தேகமாக இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தான் நான் இருப்பேன். அங்கே வந்து என்னிடம் கேட்டுட்டு போங்க. அதை விட்டு போயிட்டு என் மகள் போகும் போதும் வரும்போதும் வாய்க்கு வந்தபடி பேசி அவளை நோகடிக்கும் படி நடக்காதீங்க.

ஏதாவது ஒரு பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் தான் சப்போர்ட்டாக நிற்க வேண்டும். அப்படி சப்போர்ட் பண்ண முடியவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிப் போய் விடுங்க என்று பாண்டியன் அரிசியை கூட்டிட்டு ஊர் முழுவதும் தண்டார் போட்டுவிட்டார். இந்த செய்திகளை எல்லாம் டிவியில் வந்த பிறகு பாண்டியனை பெருமை பேசும் விதமாக பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனாலும் பாண்டியனுக்கு கொஞ்சம் ஓவராகத்தான் போய் விட்டமோ என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் அரசி இதன் பிறகு தான் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறேன் என்று பாண்டியனிடம் சொல்லி பழைய மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பாண்டியன் செஞ்ச காரியத்திற்கு சக்திவேல் மற்றும் மாரி கோபத்துடன் இருக்கிறார்கள்.

ஏனென்றால் பாண்டியன், குமரவேலு மற்றும் சக்திவேல் குடும்பத்தையும் சொல்லும் விதமாக எல்லாத்துக்கும் நோட்டீஸ் போட்டு ஒட்டி விட்டார். இதனால் மகன் ஜெயிலில் இருக்கும்பொழுது இப்படி ஒரு அவமானம் வந்துவிட்டதே என்று கோபத்தில் சக்திவேல் இருக்கிறார். இதை வைத்து பழி வாங்குவதற்கு இன்னும் சக்திவேல் என்னலாம் பண்ணப் போகிறாரோ.