சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களிலேயே எதிர்நீச்சல் சீரியல் தான் குடும்பமாக இருந்து பார்க்கும் படியாக அமைந்தது. அதற்கு காரணம் ஆணாதிக்க திமிருடன் குணசேகரன் கேரக்டர் இருந்தாலும் அதை ரசிக்கும் படியாகவும் இருந்தது. இதற்கு கவுண்டர் கொடுக்கும் விதமாக நக்கல் ராணியாக நந்தினியின் கேரக்டரும் அருமையாக அமைந்தது.
முக்கியமாக கரிகாலனின் எதார்த்தமான பேச்சும், கதிரின் அடாவடித்தனம், ஞானத்தின் சூனியம், சக்தியின் நடிப்பு போன்ற அனைத்துமே எதிர்நீச்சல் சீரியலுக்கு பிளஸ் ஆக அமைந்தது. அப்பொழுது கூட குணசேகரன் ஆடும் ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜீவானந்தம் ஒரு தாதாவாக உள்ளே நுழைந்து சொத்துக்களை ஆட்டிப்படைக்கும் விதமாக அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்து குணசேகரனையே அடக்கினார்.
ஆனால் இப்பொழுது அதெல்லாம் எங்க போயிட்டு என்று சொல்வதற்கு ஏற்ப ஜீவானந்தம் கேரக்டர் டம்மியாக இருக்கிறது. குணசேகரனின் வன்மம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, சீரியலாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு நெஞ்சுவலி வரும் அளவிற்கு கதைகள் இருப்பதால் எதிர்நீச்சல் சீரியல் எதிர்பார்த்தபடியே இல்லாமல் போய்விட்டது என்று கமெண்ட்கள் வருகிறது.
தற்போது ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து அடங்காத குணசேகரன் இன்னும் இரத்த வெறி பிடித்து தான் அலைகிறார். இதில் குற்றவை, ஈஸ்வரி நிலமைக்கு யார் என்று நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அதற்குள் அறிவுக்கரசி இதை நாம் கண்டுபிடித்து இந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் நம் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்று தயாராகிவிட்டார்.
ஜீவானந்தம் ஆஸ்பத்திரிக்கு வந்த பிறகும் ஏன் எந்தவித ஆக்சனிலும் இறங்காமல் புள்ள பூச்சியாக இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் சக்தி கேரக்டர் என்னாச்சு என்று தெரியாத அளவிற்கு மர்மமாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் 2 சீரியல் மொத்தமாகவே சொதப்பிவிட்டது.