எதிர்நீச்சல் ஈஸ்வரிக்கு எண்டு கார்டு போடும் ஜீவானந்தம்.. அறிவுக்கரசியின் புது ஸ்கெட்ச்

குணசேகரனால் தாக்கப்பட்டு நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் ஈஸ்வரி. ஒரு வழியா இன்று மருத்துவர்கள் ஈஸ்வரியை பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் அவர் நினைவு திரும்பாமல் கோமா நிலையில் தான் இருக்கிறார்.

அவர் முன்பு சொன்னது ஜனனிக்கு ஞாபகம் வருகிறது. நான் இல்லாவிட்டாலும் தர்ஷன் மற்றும் தர்ஷினியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பது ஜனனியின் மனதுக்குள் ஓடுகிறது. இதனால் அவர் இறந்து விடுவாரா? அல்லது கோமாவில் தான் இருப்பாரா என்று தெரியவில்லை.

இது குணசேகரனுக்கு தோதுவாய் போகிறது. ஈஸ்வரி தான் தர்ஷனுக்கு முழு ஆதரவாய் இருக்கிறார். அம்மா ரூபத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தில் முழு உரிமை அவருக்கு மட்டும் தான் இருக்கிறது. அவரது கோமா குணசேகரனுக்கு வசதியாய், காய் நகர்த்துவதற்கான நேரமாய் அமைந்துள்ளது.

இதனால் அப்படி இருக்கும்போதே குணசேகரன் தர்ஷனுக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பார். ஆலமரத்தின் அடிவேர் ஆடிப் போய் உள்ளது. அதனால் இனிமேல் ஜனனி தான் எல்லாருக்கும் தோள் கொடுக்க வேண்டும். அஸ்திவாரத்தையே ஆட்டம் காண செய்துவிட்டார் குணசேகரன்.

மருத்துவர்கள் தெளிவாக தெரிவித்து விட்டனர் யாரோ ஈஸ்வரியின் கழுத்தை பிடித்து சுவற்றில் முட்டியுள்ளார்கள். அதனால் தான் தலையில் அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். மறுபக்கம் வீட்டில் அறிவுக்கரசி இது எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க திட்டம் போடுகிறார். அதன் மூலம் அவர்களது குடிமையை பிடித்து புது ஸ்கெட்ச் போட உள்ளார்.