ஜெயிக்க முடியல, அதிக சம்பளம் அவதாரத்தை மாற்றிய 3 ஹீரோக்கள்.. சிவகார்த்திகேயனுடன் மல்லுக்கட்டும் நடிகர்கள்

ஏற்கனவே பாபி சிம்மா, அஜ்மல், அருண் விஜய், அரவிந்த்சாமி விநெய் என பல ஹீரோக்கள் வில்லன் அவதாரம் எடுத்து விட்டனர். இப்பொழுது புதிதாய் 3 ஹீரோக்கள் அவர்களுக்கு போட்டியா மல்லு கட்டுவதற்கு களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க. உள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு தான் இப்படி நிறைய படங்கள் அமைந்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த வேலைக்காரன் படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்து விட்டார். இப்பொழுது அடுத்தடுத்து அவர் படங்களுக்கு சாக்லேட் பாய் லுக் ஹீரோக்கள் மூன்று பேர் வில்லனாக நடிக்க உள்ளனர்.

பராசக்தி: இந்த படம் 90 சதவீதம் சூட்டிங் முடிந்துவிட்டது. இலங்கை மற்றும் கொழும்புவில் இதன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடித்து வருகிறார், சினிமாவில் முதல் முதலாக இவர் வில்லன் கதாபாத்திரமேற்றுள்ளார்.

ஆர்யா: அடுத்த சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்திற்கு ஆர்யா, வில்லனாக நடிக்க உள்ளார்.குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகர், சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆர்யா நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கப் போகிறார்.

விமல்: சிவகார்த்திகேயனுடன் நல்ல காம்போ இவருக்கு உண்டு. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஹீரோவாக நடித்த படங்கள் விமலுக்கு கை கொடுக்காததால் இவரும் அடுத்து வில்லனிசம் செய்யப் போகிறார்.