வருஷம் பூரா புருஷன கழுவி ஊத்துறது.. வரலட்சுமி விரதம் அன்னைக்கு மட்டும் கால்ல விழுந்து கும்புடுறது, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இன்று வரலட்சுமி விரதம் என்பதால் பெண்கள் காலையிலேயே விரதம் இருந்து புருஷன் நல்லா இருக்கணும் அப்படின்னு பூஜை செய்து வருகின்றனர். சுமங்கலி பெண்களுக்கு ஸ்பெஷல் நாள் என்பதால் புருஷனுக்கு கவனிப்பும் ஸ்பெஷலா இருக்கும்.

தடபுடலான விருந்து என தொடங்கி கணவன் ஆயுள் கெட்டியாக இருக்கணும் என விழுந்து விழுந்து சாமி கும்பிடுவார்கள். அதே போல் புருஷன் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கி கொள்வதும் உண்டு.

இதையெல்லாம் பார்த்த கணவர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும். வருஷம் ஃபுல்லா போடா வாடான்னு கண்டபடி பேசி கழுவி ஊத்துறது.

வரலட்சுமி விரதம் அன்னைக்கு மட்டும் மரியாதையா பேசி அர்ச்சனை பண்றது. இந்த பொண்டாட்டிய புரிஞ்சுக்கவே முடியலையே என்பதுதான் ஒவ்வொரு கணவன் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் அவர்கள் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதன் பிறகு வரும் விளைவுகள் அவர்களுக்கு தானே தெரியும். அதேபோல் வரலட்சுமி விரதம் அன்னைக்கு நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவாங்க.

மறுநாளே நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன கிழிக்க போற என கத்துவாங்க. இவ்வளவுதாங்க வாழ்க்கை என அனுபவப்பட்ட ஆண்கள் அட்வைஸ் செய்வதும் உண்டு. இதையெல்லாம் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடுகின்றனர்.

அப்படி சோசியல் மீடியாவில் வரலட்சுமி விரதம் தொடர்பாக வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு.