என் வாழ்கையை நாசம் பண்ணிய ஏ ஆர் ரகுமான்.. சூடான இயக்குனர்

A R Rahman : இந்திய சினிமாவிலேயே மிக பிரபலமான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ஏ ஆர் ரகுமான் தன் படத்தில் இசையமைக்க மாட்டாரா என இங்கு பல இயக்குனர்கள் ஏங்கி போய்த்தான் நிற்கிறார்கள்.

நிறைய படத்தை தன் இசை மூலம் வெற்றி அடைய வைத்தவர். அப்படிப்பட்ட ஏ ஆர் ரகுமான் இங்கு ஒரு இயக்குனரின் வாழ்க்கையை காலி செய்து விட்டார் என தகவல் பரவி வருகிறது. அதுவும் அந்த இயக்குனரே கூறியுள்ளார்.

ஏ ஆர் ரகுமான் என் வாழ்க்கையை காலி பண்ணிட்டாரு..

இயக்குனர் “பிரவின் காந்தி” ஒரு காலத்தில் பிரபலமான இயக்குனர். இவர் இயக்கிய “ரட்சகன்”, “ஜோடி” ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட் ஆனவை. இதற்கு அடுத்து சொல்லிக்கொள்ளும் வகையில் இவர் படங்கள் செய்யவில்லை.

தற்போது இவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஏ ஆர் ரகுமான் என் வாழ்க்கையை காலி செய்துவிட்டார். “ரட்சகன்” படத்தோட ஹிந்தி உரிமையை என்னிடம் கொடுந்திருந்தால் இன்று நான் ஹிந்தியில் பெரிய இயக்குனரக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு இவர் கூறியிருப்பது சற்று சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளது. நமக்கு ஒரு சிலர் உதவி செய்வார்கள் தான், அதற்கு அடுத்த படி நாம்தான் முன்னேறி செல்லவேண்டும் அதை விட்டுவிட்டு நாம் யாரையும் குறை சொல்லக்கூடாது என சில திரை பிரபலங்கள் இந்த இயக்குனருக்கு அறிவுரை கூறி வருகிறார்களாம்.