அறிவுக்கரசியின் கையில் சிக்கிய குணசேகரனின் குடிமி.. இன்ஸ்பெக்டர் கொற்றவைக்கு கிடைக்கும் ஆதாரம்

எதிர்நீச்சல் ஈஸ்வரி இன்னும் கோமா நிலையிலேயே மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் ஈஸ்வரியின் இந்த நிலைமைக்கு குணசேகரன் தான் காரணம் என்ற “ஐ விட்னஸ்” இல்லை. இன்ஸ்பெக்டர் கொற்றவை மருத்துவமனையில் வந்து விசாரணை நடத்துகிறார்.

குணசேகரனின் வாரிசுகள் தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும் இதற்கு எங்கள் அப்பா தான் காரணம் என துணிச்சலுடன் நிற்கிறார்கள். இன்ஸ்பெக்டர் கொற்றவை இதற்கு ஆதாரம் கேட்கிறார். ஆரம்பத்திலிருந்து தர்ஷன் கல்யாண விஷயத்தில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிரச்சனை தான் என தர்ஷினி கூறுகிறார்.

இதனால் கொற்றவை, தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரையும் அழைத்துக் கொண்டு குணசேகரன் வீட்டிற்கு விசாரணைக்காக செல்கிறார். அங்கே வேண்டாத வேலையாக என்ன நடந்திருக்கும் என்பதை ஈஸ்வரியின் ரூமிற்கு நைசாக போய் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார் அறிவுக்கரசி.

ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று ஒவ்வொன்றாய் உருட்டி ஏதாவது கிடைக்குமா எனதேடுகிறார். அவருக்கு ஒரு செல்போன் கிடைக்கிறது. அதில் குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை பிடித்து நெரித்து, சுவற்றில் முட்டுவது ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ந்த அறிவுக்கரசி அந்த வீடியோவை தன்னுடைய மொபைலுக்கு டிரான்ஸ்பர் செய்கிறார்.

வீடியோவை பரிமாற்றம் செய்யும் பொழுது இன்ஸ்பெக்டர் ஈஸ்வரியின் ரூமிற்கு வந்து விடுகிறார். இதனை தடுப்பதற்காக அறிவிக்கரசியின் அண்ணன் முல்லை இன்ஸ்பெக்டருடன் மல்லு கட்டுகிறார். அவர் நெஞ்சில் ஏறி மிதித்து “யாரிடம் வாலாட்டுகிறாய்”என கொற்றவை பத்திரகாளியாக மாறி நிற்கிறார். இதற்கிடையில் ரூமின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறது. அறிவுகரசி பாத்ரூம் சென்று இருப்பது போல் நாடகமாட போகிறார்.