குற்றவை இடமிருந்து எஸ்கேப் ஆகிய குணசேகரன்.. ஆட்டிப் படைக்கப் போகும் அறிவு

Ethirneechal 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எதிர்பார்த்தபடி ஈஸ்வரி குணசேகர்னிடம் பேசுவதற்கு முன் போனில் வீடியோவை ரெக்கார்டு செய்யும் விதமாக எல்லாத்தையும் செட் பண்ணி இருக்கிறார். இது தெரியாத குணசேகரன், ஈஸ்வரி கழுத்தை நெரித்து தலையை சுவற்றில் அடித்து உயிரை எடுக்கும் விதமாக வன்மத்தை காட்டிவிட்டார்.

இதனால் ஈஸ்வரி, சுயநினைவை இழந்து ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் ஈஸ்வரியை செக் பண்ணி பார்த்த டாக்டர்கள் ஈஸ்வரிக்கு நடந்த அநியாயத்தை சொல்லிய பொழுது குற்றவை இதை செய்தவர்கள் யார் என்பதை நான் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அந்த வகையில் குற்றவையுடன் சேர்ந்து தர்ஷன் தர்ஷினி வீட்டிற்கு போகிறார்கள். அதற்கு முன் அறிவுக்கரசிக்கு குணசேகரன் மீது சந்தேகம் வந்ததால் அந்த ரூமுக்குள் சென்று ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று பார்க்கப் போகிறார். அப்பொழுது அந்த ரூமை சுற்றி பார்க்கும் பொழுது போனில் வீடியோ இருப்பதை பார்த்து விடுகிறார்.

அதில் குணசேகரன் செய்த திருட்டு வேலைகள் எல்லாத்தையும் அறிவுக்கரசி பார்த்து விடுகிறார். அப்பொழுது குற்றவையும் வந்து விட்டதால் அறிவு அதிலிருந்து வீடியோவை அவருடைய போனுக்கு அனுப்பி வைத்து ஈஸ்வரி போனில் இருந்த வீடியோவை அழித்து விடுகிறார்.

பிறகு எதுவும் தெரியாதபோல் குற்றவையிடம் அறிவுகரசி டிராமா போட்டு விடுகிறார். குற்றவையும் அந்த ரூமை செக் பண்ணி பார்த்ததில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று ஏமாற்றத்துடன் திரும்பப் போய்விடுவார். ஆனால் குற்றவையிடம் எஸ்கேப் ஆகிய குணசேகரன் அறிவுக்கரசிடம் சிக்கிக் கொண்டு முழிக்க போகிறார். அறிவு இந்த ஆதாரத்தை வைத்து குணசேகரன் மட்டுமல்ல மொத்த குடும்பத்தையும் ஆட்டி படைக்கப் போகிறார்.