மூன்று முடிச்சு: சுந்தரவல்லி கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சூர்யா.. தடுமாற்றத்தில் நந்தினி

Moondru mudichu serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், நந்தினி கையில் அடிப்பட வேண்டும் என்று மாதவி போட்ட பிளான் தான் எல்லாமே என கல்யாணம் மூலம் சூர்யாவுக்கு தெரிந்து விட்டது. உடனே மாதவிக்கும் சுந்தரவல்லிக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக எல்லாத்தையும் கிப்டாக பேக் பண்ணி அவர்கள் செய்த தவறுக்கு மண்டையில் உரைக்கும் படி இனி நந்தினி விஷயத்தில் தலையிடாதபடி சூர்யா சம்பவத்தை செய்து விட்டார்.

ஆனாலும் சுந்தரவல்லியும் மாதவியும் திருந்தாமல் மறுபடியும் எதாவது பண்ணி நந்தினிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் நான் இருக்கேன் நந்தினிக்கு என்று சூர்யா நந்தினிக்கு ஊட்டி விட்டு சுந்தரவல்லி கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு வருகிறார்.

இதனால் கடுப்பான சுந்தரவல்லி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். ஆனால் சூர்யா செய்யும் விஷயத்தையும், காட்டும் பாசத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் நந்தினி தடுமாற்றத்தில் இருக்கிறார். அதனால் இவங்க சகவாசமே வேண்டாம் என்று ஒரேடியாக உதறிவிட்டு கிராமத்துக்கே போகலாம் என்று அந்த நாளுக்காக நந்தினி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக சூர்யா, நந்தினி மீதி இருக்கும் காதலால் தான் இப்படி பண்ணுகிறார் என்று நந்தினி புரிந்து கொண்டால் மட்டும் தான் இந்த வீடு நமக்கான வீடு நம் வாழ்ந்து ஆக வேண்டும் என்று எண்ணம் நந்தினிக்கு வரும். அதனால் கூடிய சீக்கிரத்தில் சூர்யாவை குடி பழக்கத்திலிருந்து நிப்பாட்டி விட்டு நந்தினி மீது உண்மையான காதலை காட்டி வரும் காட்சிகளுக்காக மூன்று முடிச்சு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.