ஸ்ருதிஹாசன் கைவசம் உள்ள படங்கள்.. மிஷ்கின் பற்றி உச்சி குளிர சொன்ன விஷயம்

ஸ்ருதிஹாசன் பல்துறை திறமையுடன் கூடிய நடிகை மற்றும் பாடகி. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி சினிமாக்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் 7ஆம் அறிவு போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தற்போது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் கூலி படத்தில் சத்யராஜ் அவர்களின் மகளாக நடித்து வருகிறார். அதேபோல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரும் சலார் 2 படம் 14 நவம்பர் 2025 அன்று வெளியாக உள்ளது. இதில் முக்கிய ரோலில் நடித்துவருகிறார்.

மேலும் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ஜன நாயகன் படம் 9 ஜனவரி 2026 அன்று வெளியிடப்பட இருக்கிறது. இதில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடிக்கிறார். அப்போது அவர் ஒரு பேட்டி ஒன்றில் மிஷ்கின் சார் என்னை ட்ரெயின் படத்திற்காக ஒரு பாடலை பாடுவதற்கு என்னை அழைத்திருந்தார்.

நான் அங்கு சென்றபோது அவர் ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு அதில் நீங்க நடிக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். எனக்கும் அது பிடித்திருந்ததால் நானும் நடிக்கிறேன் என்று சொன்னதாக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அவருடைய இயக்கத்தில் நடிப்பது ஒரு தனி அனுபவமாக இருந்தது என்றும் அவர் எவ்வளவு சிறந்த படைப்பாற்றல் நிறைந்தவர் என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ஸ்ருதிஹாசன் தனது தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகளினால் தமிழ் சினிமாவில் ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு படத்திலும் அவர் தன்னை மெருகூட்டி கொண்டே இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.