Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி அப்பா அம்மா கூப்பிட்டதும் போகாமல் எனக்கு இந்த வீட்டில் இருப்பது தான் சந்தோஷம். கதிருடன் வாழ்வு தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். அப்பொழுது மீனா, இவ்வளவு பிரச்சனை நடந்தும் கதிர் என்ன காணும் என்று சொல்லி ரூமுக்குள் போய் பார்க்கிறார்.
ராஜி சொல்வதைக் கேட்டு கதிர் ரூமுக்குள் ஜாலியாக இருப்பதை மீனா பார்த்து விடுகிறார். அடுத்து ராஜி, மீனாவிடம் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை எப்படி கூப்பிடும் என்று கேட்ட கேள்விக்கும் என்னுடைய அப்பா அம்மா கூப்பிடுறாங்க நான் என்ன பண்ணுவது என்று கேட்டதும் எனக்கு கோபமாக இருக்கிறது என சொல்கிறார்.
அதற்கு மீனா, உனக்கு உங்க அப்பா அம்மா கூட போகணும்னு ஆசை இருந்தால் போயிருக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார். உடனே ராஜி எனக்கு கதிர் தான் ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் தான் இங்கே இருக்கிறேன் என்று மனம் திறந்து சொல்லி விடுகிறார். அப்பொழுது மீனா அதே மாதிரி தான் கதிருக்கும் உன்னை பிடித்திருக்கிறது. நீ வெளியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரூமுக்குள் இருந்து கதிர் எவ்வளவு சந்தோஷப்பட்டான் என்று நான் பார்த்தேன் என மீனா சொல்கிறார்.
அந்த வகையில் இவர்களுடைய காதல் இரண்டு பேருக்குமே தெரிய வந்துவிட்டது. பிறகு ராஜி வரமாட்டேன் என்று சொல்லியதை கேட்டு சக்திவேல் அப்படியே விட்டுவிட முடியாது நாம் இழுத்து பிடித்து கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்கிறார். உடனே முத்துவேல், அவளுக்கு அங்கே இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டால் அதனால் இந்த பேச்சு இதோடு விட்டுவிடு என்று சொல்கிறார்.
வடிவும் அவளுடைய சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம், எதுக்கெடுத்தாலும் வெட்டுவேன் அடிப்பேன் என்று ரவுடி மாதிரி பேசாதீங்க என்று சொல்லிவிடுகிறார். அப்பொழுது சக்திவேல், குமரவேலுவிடம் பேசிய பொழுது குமரவேலும் இதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம். நான் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று சொல்கிறார். உடனே சக்திவேல் இவன் என்ன திருந்திட்டானோ என்று புலம்புகிறார்.
அந்த வகையில் குமரவேலுவும் கொஞ்சம் கொஞ்சமாக திரிந்து கொண்டு வருகிறார். இருந்தாலும் பாண்டியன், மகளுக்கு செஞ்ச அக்கிரமத்தை தட்டிக் கேட்கும் விதமாக ஜாமினில் வந்த குமரவேலு மீது மறுபடியும் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு அரசியை கூட்டிட்டு போய் குமரவேலுவிற்கு எதிராக சாட்சி சொல்லி குமரவேலுவை தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் அடுத்து பாண்டியன் அரசியை கூட்டிட்டு கோர்ட்டுக்கு போகப் போகிறார்.