இந்த வாரம் அதிக வியூஸ்களை வைத்து மிரட்டிவிட்ட OTT படம் எது தெரியுமா?

ஓடிடியில் 28 நாட்களுக்குள் வரும் படங்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. ஆகஸ்ட் 4 முதல் 10 வரை அதிக வியூஸ் பெற்ற படங்கள் வெப் தொடர்கள் பட்டியலை ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. அதை பார்க்கலாம்.

கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில், 5வது இடத்தை தெலுங்கு படம் தம்முடு பிடித்துள்ளது. நிதின், சப்தமி கெளடா, சுவாசிகா, வர்ஷா பொல்லம்மா நடித்த இப்படம், நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி 12 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. 4வது இடத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், கஜோல் நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிய சர் ஜமீன் 14 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

3வது இடத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த 3 பிஹெச் கே 17 லட்சம் வியூஸுடன் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வருகிறது. 2வது இடத்தை ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் நடித்த பறந்து போ பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இப்படம் 22 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

முதலிடத்தை அக்‌ஷய் குமார் நடித்த பாலிவுட் படம் ஹவுஸ்ஃபுல் 5 கைப்பற்றியுள்ளது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படம் கடந்த வாரம் மட்டும் 65 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த வார ஓடிடி பட்டியலில் பாலிவுட் படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
டாப் 5 வெப் தொடர்கள்

அதிக வியூஸ்களை பெற்ற டாப் 5 வெப் தொடர்கள்

வெப் தொடர்களில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ஸ்பெஷல் OPS சீசன் 2, 30 லட்சம் வியூஸுடன் முதலிடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியாகிய மண்டேலா மர்டர்ஸ் 27 லட்சம் வியூஸுடன் 2வது இடம் பிடித்துள்ளது. 25 லட்சம் வியூஸுடன் வெட்னெஸ்டே சீசன் 2 நெட்பிளிக்ஸில் 3வது இடத்தை பெற்றுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிய சலகார் 24 லட்சம் வியூஸுடன் 4வது இடத்தில் உள்ளது. 5வது இடத்தில் நெட்பிளிக்ஸின் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ 19 லட்சம் வியூஸுடன் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஓடிடி உலகில் திரைப்படங்களும் வெப் தொடர்களும் சமமாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.