கூலிக்கு சிறப்பு சலுகை வழங்கிய தமிழக அரசு.. மாறனுக்கு கொட்டும் பணமழை

ஆகஸ்ட் 14 திரையரங்குகளில் வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணியில் உருவான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில் கூலி படம் குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தி வந்தவுடன் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் முதல் காட்சி எத்தனை மணிக்கு துவங்கும் என்ற கேள்வி
மேலும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம்
பல நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வந்தது.

பான் இந்திய ரிலீஸாக வெளி வரும் இந்த படம் கேரளா மற்றும் பெங்களூரில் காலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் 9 மணிக்குத்தான் ஆரம்பம்.
அதனால் தமிழ்நாட்டில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கான கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த தமிழக அரசு, ரிலீஸ் நாளில் மட்டும்
ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 14 அன்று முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி,
கடைசி காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் மொத்தம் 5 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.