Ethirneechal 2: குணசேகரனின் ஆணாதிக்கத்தை தாண்டி அட்டூழியங்கள் செய்யும் அளவிற்கு வன்மத்தை காட்டி வருகிறார். இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று சொல்வதற்கு ஏற்ப குணசேகரன் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கிறார். தற்போது ஈஸ்வரியின் நிலைமைக்கு காரணம் ஜனனி தான் என்று மொத்த பழியையும் ஜனனி மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு பக்கம் திட்டம் போட்டு இருக்கிறார்.
ஒரு பக்கம் கதிரை கொம்பு சீவி விட்டு உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணாலும் பண்ணு நான் தடுக்க போறது இல்லை. ஆனால் எனக்கு அந்த ஜனனி கதை முடிந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். குணசேகரன் சொல்லாமலே கதிர் இஷ்டத்துக்கு ஆடுவார், இப்பொழுது கதிர் காலில் சலங்கையும் கட்டி விட்டாச்சு இனி என்ன ஆட்டம் ஆட போகிறாரோ.
ஆனால் ஏற்கனவே கிட்டத்தட்ட பல அட்டூழியங்களை பண்ணி அதற்கான தண்டனைகள் கிடைக்காமல் போய்விட்டது. அந்த வகையில் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக நடந்த கல்யாணம், கல்யாணத்துக்கு வரவிடாமல் அருணை கொலை செய்யும் அளவுக்கு துன்புறுத்தியது, ஜீவானந்தம் மனைவியை கொலை பண்ணியது, அப்பத்தாவிற்கு விஷம் கொடுத்தது, தர்ஷனியை கடத்திட்டு போய் சித்திரவதை செய்தது, பார்கவி குடும்பத்துக்கு டார்ச்சர் கொடுத்து பார்க்கவின் அப்பாவையும் கொலை பண்ணியது. இப்படி குணசேகரன் கதிர் செய்த குற்றங்கள் போய்க் கொண்டே இருக்கிறது.
தற்போது இந்த லிஸ்டில் ஈஸ்வரியின் நிலைமையும் மோசமாகிவிட்டது, அதை மறைக்கும் விதமாக ஜனனியே டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதுல வேற கனடாவுக்கு போன பார்கவி, ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று திரும்ப வந்துவிட்டார். குணசேகரன் இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்த நிலையில் இன்னும் யாரெல்லாம் பலியாடாக சிக்க போகிறார்களோ,
ஆனால் ஜனனி இந்த கேசில் மும்மரமாக இருப்பதால் குற்றவை வீட்டிற்கு வரும் பொழுது ஈஸ்வரி ரூமில் இருந்து எதற்கு அறிவுக்கரசி வெளியே வர வேண்டும். அப்படி என்றால் ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருக்கிறது என்று ஜனனி அறிவுக்கரசி மீது சந்தேகப்பட்டு விட்டார். அதனால் அறிவு கரசியிடம் இருக்கும் ஆதாரம் ஜனனிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதற்குள் இன்னும் என்னென்ன சம்பவங்களால் நடக்கப் போகிறதோ, இத்தனை வருஷமாக கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு விடிவுகாலமே இல்லை, என்று சொல்வதற்கு ஏற்ப தொடர்ந்து தோற்றுக் கொண்டே வருகிறார்கள். இந்த முறையாவது வெற்றி கிடைத்து குணசேகரன் கும்பலுக்கு தண்டனை கிடைத்தால் பெண்களுக்கு விமோசனம் கிடைக்கும்.