சூர்யாவை குறி வைக்கும் அரைவேக்காடுகள்.. தொடர் தாக்குதலுக்கு காரணமான 2 சம்பவங்கள்

Suriya: சூர்யா மீது கடந்த சில வருடங்களாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவருடைய படம் ரிலீஸ் ஆனால் போதும் உடனே அவருடைய எதிர்ப்பாளர்களுக்கு குஷியாகிவிடும்.

பட ரிலீஸ் தேதிக்கு முதல் நாளே அது தோல்வி என சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டிங்கில் விடுவார்கள். அதேபோல் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வரும்.

இப்படி சூர்யாவை குறி வைத்து தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்னென்னவோ சப்பை காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் இரண்டு சம்பவங்கள் தான் பின்னணி காரணமாக இருக்கிறது.

முதலாவதாக ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டார்கள் என எழுந்த சர்ச்சை தான். வேணும்னு தான் படத்தில் இப்படி ஒரு விஷயம் இருந்திருக்கிறது என அந்த சமூகத்தினர் எழுப்பிய குரல்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர் தாக்குதலுக்கு காரணமான 2 சம்பவங்கள்

மறைமுகமாக சூர்யா படத்தை காலி செய்ய வேண்டும் என அவர்கள் வேலை செய்து வருவதும் தொடர்கிறது. அதை அடுத்து ஜோதிகா ஒரு முறை மேடையில் கோவில்களுக்கு காசு கொடுப்பது போல் மருத்துவமனைக்கும் கொடுங்கள் என்று சொன்னார்.

ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சையானது. கோவில்களுக்கு காசு போடாதீர்கள் என அவர் சொன்னது போல் சில விஷமிகள் கடும் சர்ச்சையாக மாற்றி விட்டனர் இந்த சம்பவங்கள் தான் சூர்யா மீது வன்மத்தை தொடர்வதற்கு காரணம்.

அதேபோல் சமீபத்தில் நடந்த அகரம் விழாவும் அவர் மீது ஒரு அரசியல் சாயத்தை பூசி இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறது திரையுலக வட்டாரம்.