ஜனனியை சாய்த்து விட்டால் மொத்த குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என்பது தான் குணசேகரனின் அடுத்த டார்கெட். இதனால் கடைசி தம்பி சக்திக்கு மறுமணம் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார். தர்ஷன் கல்யாணத்தோடு சக்திக்கு மீண்டும் திருமணம் என்கிறார்.
ஈஸ்வரி மற்றும் குணசேகரன் சண்டையிடும் வீடியோ ஈஸ்வரியின் மொபைல் போனில் ரெக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதுதான் இந்த கேசுக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. அது இப்பொழுது அறிவுக்கரசி கைகளில் சிக்கிவிட்டது
இந்த கேசில் ஜெயிக்க வேண்டும் என்றால் ஈஸ்வரி கண் முழிக்க வேண்டும் அல்லது அறிவுக்கரசி மொபைலில் இருக்கும் ஆதாரம் வெளிவர வேண்டும். ஈஸ்வரியின் மொபைல் அவர் ரூமின் கட்டில் கீழே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அது யார் கையில் சிக்க போகிறது என்று தெரியவில்லை.
குணசேகரன் ஈஸ்வரியை சாய்த்து விட்டு எதுவுமே தெரியாதது போல் வீட்டில் நடிக்கிறார் ஆனால் ஈஸ்வரியுடன், குணசேகரன் சண்டையிடும் வீடியோவை ஃபோனில் பார்த்துவிட்டார் அறிவுக்கரசி. ஒவ்வொரு முறை குணசேகரன் நடிப்பதை பார்த்து உள்ளுக்குள் ஏதோ திட்டம் போடுகிறார்.
குணசேகரன், தான் ஜெயிப்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார் என்பதை புரிந்து கொண்டார் அறிவுக்கரசி. எப்படியும் தனது தங்கை மற்றும் தர்ஷன் திருமணத்தை குணசேகரன் நடத்தி ஜெயிப்பார் என மனக்கோட்டை கட்டி வருகிறார். ஆனால் பார்கவி கனடா செல்லாமல் திரும்பி வந்தது பெரிய டிவிஸ்ட்டாக அமைந்துள்ளது.