லோகேஷ், நாக வம்சிக்கு உள்ள வேறுபாடு.. வார் 2-க்கு இப்படி ஒரு ப்ரமோஷனா?

Lokesh Kanagaraj : கூலி மற்றும் வார் 2 படங்கள் நாளை தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அதிக வசூலை எந்த படம் பெரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாகவே படங்களுக்கு இப்போது பிரமோஷன் முக்கியமாக இருக்கிறது.

இதனால் கூலி மற்றும் வார் 2 படக்குழு போட்டி போட்டுக்கொண்டு பிரமோஷன் செய்து வருகிறார்கள். குறிப்பாக கூலி படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்ற தலைப்பில் அதிக செய்திகள் உலாவி வருகிறது. படத்தில் ரஜினி என்ற மாஸ் நடிகர் உள்ளதாலும், லோகேஷ் உடன் முதல் முறையாக கூட்டணி போட்டுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து லோகேஷ் சமீபத்திய ஊடகம் ஒன்றில் பேசிய நிலையில், கூலி படம் 100 கோடி வசூல் செய்யும் என்பதை தன்னால் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு வாக்குறுதியை என்னால் கொடுக்க முடியும்.

லோகேஷ், நாக வம்சிக்கு உள்ள வேறுபாடு

கூலி படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வரும்போது நீங்கள் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்கு கண்டிப்பாக வொர்த்தாக இருக்கும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் தெலுங்கு விநியோகஸ்தர் நாக வம்சி பேசியதுதான் இப்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஹிந்தியில் உருவாகி இருக்கும் வார் 2 படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் தெலுங்கு உரிமையை 50 கோடிக்கு நாக வம்சி பெற்றிருக்கிறார்.

இதற்கான பிரமோஷனில் பேசிய நாக வம்சி வார் 2 படம் பாலிவுட்டில் செய்யும் வசூலை விட தெலுங்கில் ஒரு ரூபாய்யாவது அதிகம் வசூல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது உங்களுடைய பொறுப்பு என தெலுங்கு ரசிகர்கள் முன் பேசி இருக்கிறார்.

லோகேஷ் தன் மீது நம்பிக்கை வைத்து பேசியிருக்கிறார். ஆனால் நாக வம்சி ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இருப்பதாக விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்பது நாளைக்கு தெரிந்து விடும்.