1000 கோடிக்கு ஒர்த்தா.. கூலி எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Coolie Twitter Review: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள கூலி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதனாலேயே ரசிகர்களும் பட வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். அதேபோல் இது தலைவரின் திரையுலக பயணத்தின் 50ஆவது வருடம்.

அதை கொண்டாடும் விதமாக கூலி உருவாகி இருக்கிறது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதில் எல்லோருமே தலைவரை ஆஹா ஓஹோ என வழக்கம் போல புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் நாகார்ஜுனா ஸ்டைலாக நடித்துள்ளதாகவும் ஸ்ருதிஹாசனின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் என பாராட்டி வருகின்றனர். அதேபோல் அனிருத்தின் இசை பிஜிஎம் அனைத்துமே வேற லெவல்.

கூலி எப்படி இருக்கு.?

இடைவேளை காட்சி தலைவரின் இன்ட்ரோ கிளைமேக்ஸ் என ஒவ்வொன்றும் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் தலைவரை பிடிக்காத மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூலி சோலி முடிஞ்சு போச்சு என நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் அடுத்தடுத்த காட்சிகளின் முடிவில் நடுநிலையான விமர்சனம் வரும் போது தான் எதுவும் முடிவு செய்யப்படும். இதையெல்லாம் தாண்டி திரையரங்குகளை அதிர வைத்திருக்கிறது கூலி.