Vijay : “தமிழக வெற்றி கழகத்தின்” முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து. தற்போது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்துவதற்காக திட்டம் தீட்டி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதில் ஏற்கனவே முடிவு செய்திருந்த மாநாடு தேதியை தற்போது முன்கூட்டியே மாற்ற சொல்லி நெருக்கடி கொடுத்த ஆளுங்கட்சியால் தற்போது ஆகஸ்ட் 21-ம் தேதி மாநாட்டு நடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.
மதுரை மாநாட்டின் நிலைமை என்ன..
இப்போது அனைத்து வேலைகளையும் 4 நாட்கள் முன்னதாகவே முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர் “தமிழக வெற்றி கழகத்தினர்”. முன்கூட்டியே தேதி வைக்க சொன்னால் கண்டிப்பாக திணறுவார்கள் என யோசித்துதான் ஆளுங்கட்சி இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
இதுவரை மாநாட்டு திடல் வேலை 75% நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தண்ணீர் குழாய் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஆம்புலன்ஸ் முன்னேற்பாடுகளும் முடிவடைந்துவிட்டதாகவும். இன்னும் இருக்ககைகள் அமைக்கும் பணி மீதமுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
4 நாட்கள் முன்னதாகவே தேதி அறிவித்ததால் கழக தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக இறங்கி செய்யப்பட்டு வருகின்றனர். தண்ணீர் குழாய்கள் எல்லாம் இருக்கைக்கு பக்கமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக, தனித்தனி வரிசைக்கு குழாய்கள் அமைத்திருக்கிறார்களாம். விக்கிரவாண்டி மாநாட்டில் நடந்த சிறுசிறு தவறுகளை கூட மதுரை மாநாட்டில் நடைபெறக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
25 லட்சம் பேர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த மாநாடு நடந்து முடிந்தால் விஜய்யின் செல்வாக்கு இன்னும் உயரும் எனவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஏற்கனவே கருத்துக்கணிப்பில் விஜய்தான் முன்னணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.