Cinema : சினிமா என்றாலே பெரும்பாலும் மக்களுக்கு பிடித்த ஒன்றாவே இருந்து வருகிறது இன்றளவில். ஆனால் முன்பு போல் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் என்று திரைக்கு வராமல், ஒரு நாளைக்கு இத்தனை படம் என்ற கணக்கில் தற்போது படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு வெளிவருவதால் அனைத்து படமும் மக்கள் மத்தியில் நிலைத்திருப்பதில்லை. ஒரு சில படங்கள்தான் மக்களுக்கு பதிகின்றன. அவ்வாறு உள்ள ஒரு சில படத்தையும் சமூக ஊடகங்கள் வெறுக்க வைத்து விடுகின்றன.
மக்கள் கூறும் காரணங்கள்..
முன்புபோல் தற்போது படங்களை அதிக அளவில் யாரும் ரசிப்பதில்லை. என்னதான் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ், குறும்படங்கள், சீரியல்கள் என அனைத்தும் இருந்தாலும் படம் என்பது அனைவரும் விருப்பும் ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட படத்தையே இன்று யாரும் ரசிப்பதில்லை.
இதற்கான காரணம் என்ன என்று பார்க்க போனால்! ஒரு படம் வெளிவந்ததும் உள்ள ரசிகர்கள் சண்டை, வசூல் சண்டை இது ஒருபக்கம் இருக்க, இப்போ வந்திருக்கும் புது ட்ரெண்ட் என்னவென்றால் படம் வெளிவருவதறகு முன்பு ஓவர் ஹைப் கொடுப்பது எரிச்சலூட்டும் வகையில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சினிமா ட்ரோல்ஸ் ஒருபக்கம், காசை வாங்கிக்கொண்டு ஒருபக்கமாக விமர்சனம் செய்வது, படத்தை வைத்து அரசியல் கருத்தியல் சண்டைகள் என ஒரு படத்தை பார்ப்பதற்குள் எங்களை பாடாய் படுத்தி விடுகிறார்கள். ஆகவே எங்களுக்கு படத்தை பார்ப்பதற்கு ஆர்வம் குறைந்துகொண்டே போகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.