Lokesh: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று கூலி வெளியானது. ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இது படம் பற்றியது கிடையாது, லோகேஷ் மீதான விமர்சனம் தான். மாநகரம், கைதி என அடுத்தடுத்த படங்களால் கவனம் பெற்ற இவர் இப்போது எதற்காக விமர்சிக்கப்படுகிறார் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
இவருடைய முதல் இரண்டு படங்களைத் தவிர மற்ற படங்கள் எல்லாமே நடுநிலை ஆடியன்ஸை மனதில் வைத்து எடுக்கப்பட்டது கிடையாது. எப்போது அவர் பெரிய ஹீரோக்களுக்கு படம் பண்ண போனாரோ அப்போதே இந்த நிலை மாறிவிட்டது.
லோகேஷ் சறுக்கியது எங்கே.?
ஹீரோக்களின் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதுதான் அவருக்கு வைக்கப்பட்ட கண்டிஷனாக இருக்க வேண்டும். அதேபோல் தயாரிப்பு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம்.
வியாபாரம் இவ்வளவு இருக்க வேண்டும் என்ற நெருக்கடி ஆகியவை தான் அவர் மீதான விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது. விக்ரம் அவருடைய பாணியில் இருந்தாலும் கூட கமல் ரசிகர்களுக்காக சில விஷயங்கள் அதில் இருந்தது.
அதேபோல் தான் லியோ கூலி ஆகிய படங்களும் ரசிகர்களுக்காகவும் பிசினஸ்காகவும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் லோகேஷ் அந்த வலையில் சிக்கிவிட்டாரோ என தெரிகிறது.
அவருடைய ஒரிஜினாலிட்டி மறைந்து கார்ப்பரேட் சொல்வதை கேட்டு அதற்கு ஏற்றார் போல் படம் எடுப்பதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. லியோ படம் வெளிவந்த போதே சில நெருக்கடிகள் இருந்தது பற்றி அவர் கூறியிருந்தார்.
தற்போது கூலி பட விமர்சனமும் அதைத்தான் சொல்கிறது. படத்தில் பெரிய நெகட்டிவ் விஷயங்கள் இல்லை என்றாலும் மேலே சொன்ன காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது.
இதை லோகேஷ் கவனத்தில் வைத்து அடுத்த படத்தில் சுதாரித்துக் கொள்ள வேண்டும் என இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர். உண்மையில் பெரிய ஹீரோக்களுக்கு படம் பண்ணும் இயக்குனர்களின் நிலை இதுதான். இது மாறினால் நிச்சயம் கோலிவுட் பழைய ஃபார்முக்கு வந்துவிடும்.