தமிழ் சினிமாவில் 4 இயக்குனர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட்..

இயக்குனராக பல படங்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு சில ட்ரீம் ப்ராஜெக்ட் இருக்கும். இங்கே அப்படிப்பட்ட 4 தமிழ் இயக்குனர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட் பற்றி பார்க்கலாம்.

தற்போது எஸ் ஜே சூர்யா நடித்து மற்றும் இயக்கி வரும் கில்லர் மூவி தனது ட்ரீம் ப்ராஜெக்ட் என்று கூறியுள்ளார். 10 வருடம் கழித்து டைரக்ட் செய்யும் இந்த படத்தை ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம்.

வேள்பாரி நாவல் தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் அதை படமாக எடுப்பது தன்னுடைய கனவு என்று ஷங்கர் கூறியுள்ளார். பெரிய பட்ஜெட் ல் நிறைய நட்சத்திர பட்டாளங்களை இந்த படத்தில் களமிறக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இரும்பு கை மாயாவி படத்தை 10 வருசமா எழுதிக்கிட்டு வருகிறேன் இதுதான் என்னுடய பெரிய ட்ரீம் ப்ராஜெக்ட் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் கிராபிக்ஸ் அதிகம் இருக்காது. கதை மற்றும் ஆக்ஷன் க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பேன். இந்த படத்தை சூர்யாவை ஹீரோவா வைத்து எடுப்பேன் என கூறியுள்ளார்.

சங்க மித்ரா படம் பிரமாண்டமாக அனௌன்ஸ் செய்து வெளிநாட்டில் பிலிம் பெஸ்டிவல் மாதிரி பூஜை சேட்டு படத்தை ஸ்டார்ட் செய்தார்கள். இதில் ஜெயம் ரவி, ஆர்யா , ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப்படம் சுந்தர் சி யின் கனவு படம் என அவரது அசிஸ்டன்ட் Eleven பட இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த 4 டைரக்டர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட்கள் தமிழ் சினிமாவுக்கு புதிய உயரங்களை தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கனவு காணப்பட்ட இந்த படங்கள் ஒருநாள் நிச்சயம் வெளிவந்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் உறுதியாகவே உள்ளது.