விஜயகாந்த்தை அவமானப்படுத்தினார்கள்.. ஆதங்கப்பட்ட பிரபல நடிகை

Vijayakanth : நடிகர் விஜயகாந்த் அவர்கள் அனைவர் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டார். யாராலையுமே வெறுக்க முடியாத ஒரு மனிதர் என்றால் அப்துல்கலாம், ரத்தன் டாடா, அதற்கு அடுத்து விஜயகாந்த் அவர்கள்தான்.

இவர் திரையுலகதில் மட்டுமல்லாமல், அனைத்து மக்களின் மனதையும் சேர்த்தே சம்பாரித்து விட்டார். இவர் அரசியலில் இருந்தபோது கிடைத்த ஆதரவு, இவருக்கு எதிராக செய்த சதி வேலையால் குறைந்துகொண்டே சென்றது. பிறகு இவரும் மண்ணை விட்டு பிரிந்து சென்றார்.

பொதுவாக ஒன்று சொல்வார்கள், ஒருவரின் மதிப்பு இருக்கும்போது தெரியாது, அவர் இல்லாதபோது தான் மதிப்பு தெரியும் என்பார்கள். அதுபோல விஜயகாந்தை நாம் தவறவிட்டுவிட்டோம் என இப்போது வருத்தப்படுகிறார்கள். உயிரோடு இருக்கும்போது அவரை எதிர்த்த கூட்டம் அனைத்துமே இப்போது வருத்தப்படுகிறது, இப்படி ஒரு மனிதனை இழந்துவிட்டோம் என்று.

விஜயகாந்த்-தை அவமானப்படுத்தினார்கள்..

தற்போது நடிகை குஷ்பூ அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் அவர்களை பற்றி ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். நானும், விஜயகாந்த் சாரும் ஒரு ஷூட்டிங்கு போனோம். அங்கு இருந்த அனைவரும் ஹிந்திக்காரவங்க. யாருமே விஜயகாந்த் உட்கார ஒரு chair-கூட எடுத்துபோடல.

எனக்கு பயங்கர கோவம் வந்துட்டு. நான் அவங்களாக திட்ட போனேன், உடனே விஜயகாந்த் என்னை தடுத்து வேண்டாம் என கூறிவிட்டார். பிறகு, நம்மை நம்பி 2000 குடும்பங்கள் உள்ளது. ஆகவே கொஞ்சம் பொறுமையா இருங்கள் என கூறிவிட்டார்.

அவர் அப்படி கூறியதும், அவர் மேல் எனக்கு இன்னும் மரியாதை அதிகரித்தது. இப்படியொரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. விஜயகாந்த் ஒரு உன்னதமான மனிதர். தமிழ் திரையுலகத்தில், இவர் ஒரு சொக்கத்தங்கம் இவ்வாறு நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

விஜயகாந்த் இறந்ததிற்கு அப்புறம் அவரை பற்றிய நல்ல விஷயங்களை பகிர்வதற்கு, அவர் இருக்கும் பொது கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் ஆசைப்பட்ட மாதிரி தமிழ்நாட்டை அவரை ஒருமுறையாவது ஆள வைத்திருக்கலாம். அவரை பற்றி சில எதிர்மறை கருத்துக்கள், அவரை சிதைத்துவிட்டது எனவும் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்களாம்.