நிலாவுக்கு சர்ப்ரைஸ், பிளான் பண்ணிய சோழன்.. போலீஸிடம் கெஞ்சும் சேரன்

ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கடமைக்காக வீட்டில் இருக்கும் நிலா மனசார தன்னுடைய பொண்டாட்டியாக இருக்க வேண்டும். அதற்கு நிலா மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று சோழன் முயற்சி எடுத்து வருகிறார். அதனால் நிலா மீது பாசத்தை காட்டி சில விஷயங்களை செய்ய நினைக்கிறார்.

ஆனால் நிலாவுக்கு சோழன் பேசுவதும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதுமாக இருப்பதால் எரிச்சலாக இருக்கிறது. ஆனால் சோழன் இதெல்லாம் கண்டு கொள்ளாமல் நிலா பஸ்ஸில் போய் கஷ்டப்படக்கூடாது ஆபீசுக்கு கெத்தாக போக வேண்டும். அதற்கு ஒரு பைக் வாங்கி கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் நிலா ஆபிஸ்க்கு போனதும் பாண்டியனிடம் நிலாவுக்கு ஒரு நல்ல பைக் வாங்கி கொடுக்கணும். எவ்வளவு ஆகும் என்று பாண்டியனிடம் கேட்கிறார், அதற்கு பாண்டியன் 1.50 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொல்லிய நிலையில் அவ்வளவு ஆகுமா என்று முழிக்கிறார். உடனே சேரன் இப்பதுக்கு செகண்ட்ஸ்ல ஒரு நல்ல பைக் வாங்கி கொடுக்கலாம்.

அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுக்கிறார், உடனே சோழன் இதுவும் நல்ல ஐடியா தான், அப்படியே பண்ணலாம் என்று பாண்டியனிடம் ஒரு நல்ல பைக்கை கேட்டு நிலாவுக்கு சர்ப்ரைஸ் பண்ணி கொடுப்பதற்கு தயாராகி விட்டார்.

இதனை அடுத்து பாண்டியன் சவாரி போகும்பொழுது ஒரு சின்ன விபத்து ஆகிவிட்டது. இந்த பிரச்சினையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகும் அளவிற்கு சோழன் மீது புகார் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் சோழனை காப்பாற்றும் விதமாக சேரன் மற்றும் நிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸிடம் பேசுகிறார்கள்.