தீனா கதை அஜித் சாரை உடனே கவர்ந்ததா? ஏ.ஆர்.முருகதாஸ் நினைவுகள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், தனது ஆரம்பகால அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா குறித்து அவர் கூறிய சுவாரஸ்யமான சம்பவங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

“நான் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஒரே படத்தில் அசிஸ்டண்ட் டைரக்டர்களாக பணியாற்றியிருக்கிறோம். அந்த காலத்திலிருந்தே நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாகி விட்டோம். பின்னர் அஜித் சார் ‘சிட்டிசன்’ படத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார். அந்த 60 நாட்களில் ஒரு படம் செய்ய விரும்பினார். அப்போது நான் ‘தீனா’ கதையைச் சொன்னேன்; அவருக்கு அது ரொம்பப் பிடித்தது!” என்று முருகதாஸ் கூறினார்.

2001-ல் வெளிவந்த ‘தீனா’ படம் அஜித்துக்கு “தல” பட்டத்தைப் பெற்றுத் தந்தது. தீனா கதையில், நட்பு, நம்பிக்கை, அன்பு போன்ற உணர்வுகளை முருகதாஸ் எளிதாக ரசிகர்களுக்கு கொண்டு சென்றார். அந்த வெற்றி, அஜித் – முருகதாஸ் இணைப்பை ரசிகர்கள் மனதில் வெற்றி கூட்டணியாக நினைத்தனர்.

முருகதாஸ் மேலும்:

“எஸ்.ஜே.சூர்யாவுடன் அந்தக் காலத்தில் இருந்த அனுபவங்களும், அஜித் சார் படத்துக்குக் கொடுத்த அர்ப்பணிப்பும் மறக்க முடியாதவை. சினிமா பயணத்தில் கிடைத்த பெரிய பாடமாகவும், நண்பர்களாக வலுவாக இணைந்த தருணமாகவும் அது இருந்தது.”

சமூக வலைதளங்களில் இந்த பேட்டி தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், “அஜித் – முருகதாஸ் மீண்டும் இணைய இருப்பதாகவும் செய்திகள் வருகிறது.