Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் செக்கப்புக்காக பாக்கியம் கோமதி சரவணன் ராஜி கதிர் என அனைவரும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். அங்கே டாக்டரிடம், தங்க மயிலுக்கு ஸ்கேன் பண்ணி பார்த்து குழந்தை எப்படி இருக்கிறது என்று சொல்ல சொல்கிறார்கள்.
அந்த வகையில் தங்கமயிலை தனியாக கூப்பிட்டுப் போன டாக்டர் தங்கமயிலை செக் பண்ணி பார்த்ததும் குடும்பத்திற்கு முன் கூட்டிட்டு வந்து விடுகிறார். அதன்பின் தங்கமயில் கர்ப்பம் இல்லை என்ற விஷயத்தை டாக்டர் சொல்கிறார். இதை ஏற்றுக் கொள்ள முடியாது தங்கமயில், நல்ல செக் பண்ணி பாருங்க. நான் வீட்டில் வைத்து பார்த்த பொழுது இரண்டு கோடு வந்தது என்று சொல்கிறார்.
அதற்கு டாக்டர், சில நேரம் அந்த கிட்டு தவறாக கூட காட்டும், ஆனால் செக் பண்ணி பார்த்ததில் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று சொல்கிறார். உடனே பாக்கியம், அப்படி என்றால் இரண்டு மாதம் எப்படி தள்ளிப் போய் இருக்கு என்று கேட்கிறார். அதற்கு டாக்டர் அது வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்கும். அதை தனியாக தான் நாம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
இதை கேட்டதும் கோமதி சரவணன் எதுவும் சொல்லாமல் ஏமாற்றுத்துடன் கிளம்பி விடுகிறார்கள். இந்த விஷயத்தை கேட்டதும் ராஜி மற்றும் கதிர், சரவணன் தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அடுத்து அனைவரும் வீட்டுக்கு வந்த நிலையில் தங்கமயிலை பார்த்து இனிமேல் நீ எப்படி இறங்கி வந்தாலும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லி கோமதி உதாசீனப்படுத்தி விடுகிறார்.
சரவணன் எதுவும் பேசாமல் கடையில் வேலை இருக்கிறது என்று கோபமாக கிளம்பி விடுகிறார். இதனால் தங்கமயில் மனதளவில் நொந்து போய் வீட்டுக்குள் போகிறார். பிறகு அனைவரும் ஆறுதல் சொல்லிய நிலையில் கோமதி, இந்த விஷயத்தை எப்படி பாண்டியனிடம் சொல்ல முடியும் என்று கவலையுடன் இருக்கிறார். அடுத்து எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிய வரும் பொழுது அனைவரும் உடைந்து போய்விடுவார்கள்.
ஆனால் சரவணன் இதெல்லாம் தங்கமயில் சொன்ன பொய்தான் என்று தங்கமயிலை வார்த்தையால் நோகடிக்க போகிறார். ஏனென்றால் தங்கமயில் ஏற்கனவே சொன்ன பொய்கள் தான் சரவணன் இப்படி பேச வைத்திருக்கிறது.
முன்வினை செஞ்ச பாவம் தொடரும் என்று சொல்வதற்கு ஏற்ப பாக்கியம் தங்கமயில் சொன்ன பொய்யால் தற்போது வரை சரவணன் இடம் சாட்டையடி வாங்கும் அளவிற்கு தங்கமயில் அனுபவித்து வருகிறார். இந்த கஷ்டமெல்லாம் சரி செய்யும் விதமாக மீனா கர்ப்பமாக போகிறார்.