Gunasekaran VS Janani: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஈஸ்வரியை அடித்து சுயநினைவை இழக்க வைத்திருக்கிறார். ஆனால் அந்த பழியை அப்படியே ஜனனி மீது போட்டு ஜனனியை கம்பி எண்ண வைக்கலாம் என்று கட்டுக்கதை கட்டினார். அதன்படி போலீசும் ஜனனியே அரெஸ்ட் பண்ணிட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனார்கள்.
அந்த வகையில் ஜனனியை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆனால் அரெஸ்ட் பண்ண சரியான சாட்சி இல்லை என்று தீர்ப்பு வந்து விட்டது. இருந்தாலும் ஜனனி தான் இந்த தவறுகளை பண்ணி இருக்கிறார் என்று விசாரணையில் தெரிய வந்தால் உடனே ஜனனியை அரெஸ்ட் பண்ணலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனால் ஜனனி இனி மேலும் பொறுத்துக் கொண்டு இருந்தால் ஈஸ்வரியின் நிலைமைக்கு நியாயம் கிடைக்காது என்று பொறுத்தது போதும் என்று யுத்தத்திற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் குணசேகருக்கு போட்டியாக யுத்தத்துக்கு தயாராகிய ஜனனி இனி சென்டிமென்ட் பாசம் குடும்பம் என எந்த சொந்தமும் இருக்காது, யுத்தத்துக்கு தயார் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆனால் ஜனனி சொல்வதைக் கேட்டு கடுப்பான கதிர், ஜனனியை அடிப்பதற்கு தயாராகிய நிலையில் சக்தி, கதிரை வெளுத்து விடும் அளவிற்கு மாஸ் காட்டிவிட்டார். இதுதான் வேணும் சக்தி என்று சொல்வதற்கு ஏற்ப இவ்வளவு நாளாக அமைதியாக இருந்து சக்திக்கு சக்தி கிடைத்து விட்டது.
இனி ஜனனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி தான் என்பதற்கு ஏற்ப குணசேகரன் ஆட்டம் முடியப் போகிறது. அறிவுக்கரசி வைத்திருக்கும் ஆதாரம் வெளியே வரப் போகிறது, ஜனனிக்கு ஆதரவாக சக்தி, குணசேகரனை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். இனி கதை ஒவ்வொன்றும் சூடு பிடிக்க தயாராகி விட்டது.