தலைகுனியும் நெகடிவ் விமர்சகர்கள்.. தலைதூக்கும் கூலி

Coolie : கூலி படம் ரிலீஸ் ஆனதிற்கு அப்புறம் திரையுலகத்தில் பெரிய போராட்டக்களமே வெடித்துவிட்டது. ஒரு சின்ன நெகடிவ் இருந்தால் கூட அந்த படத்தை பற்றி எதிர்மறையாக விமர்சித்து மொத்த படத்தையும் காலி செய்துவிடுகிறார்கள்.

அந்தவகையில் தற்போது கூலி, அந்த யுத்தததை சந்தித்து அதிலேயே மூழ்கி விடாமல் ஒருவழியாக மீண்டு வந்துவிட்டது. என்னதான் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், படத்தை நேரிடையாக பார்த்து விட்டு மக்களும் படத்தை கொண்டாடுகிறார்கள்.

ரஜினி அனைவர்க்கும் பிடித்த நடிகராக இருந்தாலும் கூட, அவர் நடித்து தோல்வியடைந்த படங்களும் இருக்கின்றன. ஆனால் கூலி படம் உண்மையிலேயே நல்ல படம், மக்கள் அதை ரசிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் ஓடிவிடும் மற்ற நாட்களில் மண்ணை கவ்வும் என எதிர்பார்த்த எதிர்மறை விமர்சகர்கள். தற்போது தலைகுனிந்து நிற்கிறார்களாம்.

கூலி படம் விடுமுறை நாட்களை கடந்து, வேலைநாட்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆனதிலிருந்து தொடர்ந்து “housefull” கொடுத்துக்கொண்டிருக்கிறது கூலி. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எல்லாம் ஒரே கொண்டாட்டத்தில் உள்ளார்களாம்.

தலைகுனியும் நெகடிவ் விமர்சகர்கள்..

இந்த கொண்டாட்டத்தை பார்த்ததும் கூலி படத்தை பற்றிய எதிர்மறையாக விமர்சித்த அனைவரும் சீக்கிரம் தலைமறைவாகிவிடுவார்கள் போல. கூலிப்படத்தின் எதிர்மறையாக விமர்சித்தவர்கள் தலைகுனிந்துவிட்டனர். கூலி படம் மாஸ்ஸாக தலைதூக்கிவிட்டது.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் கூலி கண்டிப்பாக 1000 கோடி வசூல் சாதனையை பெற்றுவிடும் எனவும் கூறுகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் நெஞ்சைநிமிர்த்தி கூலி படம் சாதனை செய்யும் எனவும் பெருமையுடன் கூறுகிறார்களாம்.