கூலி விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் மட்டும் டார்கெட்.. விஜய் அரசியலை காலி செய்ய தீட்டும் திட்டமா?

Vijay : ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி, பிறகு வரவில்லை. எதிர்பார்காதபோது அரசியலை கெயிலெடுத்தவர் விஜய். என்னதான் ரசிகர்கள் பிரச்சினை இருந்தாலும் கூட விஜய் அரசியலுக்கு வந்தவுடன் அனைத்து ரசிகர்களும் ஒன்றுசேர்ந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் கூட இவர் தனித்து அரசியலில் செய்ல்படும் போது ரசிகர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஆனால் இவர் இப்போது ஒரு கட்சியுடன் கூட்டணியில் உள்ளதால் ரசிகர்கள் செல்வாக்கு குறைந்து விட்டது.

தற்போது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை வைத்திருப்பவர் ரஜினி. ரஜினி அரசியலுக்கு வராததால் ரஜினி ரசிகர்கள் விஜய்யை ஆதரிக்கிறார்கள். இதை அறிந்துகொண்ட பெரியகட்சி. விஜயை வீழ்த்த எவ்வளவு ஆயுதம் எடுத்தாலும் கைகொடுக்கவில்லை என எண்ணி, அதனால் தற்போது ரிலீஸ் ஆன “கூலி” படத்தை ஆயுதமாக்கியுள்ளனர் என பேசிக்கொள்கிறார்களாம் பிரபலங்கள்.

விஜய் அரசியலை காலி செய்ய தீட்டும் திட்டமா..

தற்போது விஜய் இரண்டாவது மாநாடு நடக்க போகிறது, விஜய்யின் “ஜனநாயகன்” படம் ரிலீஸ், எதிர்வரும் தேர்தல் இது எல்லாத்தையுமே கருத்தில் கொண்டு மொத்தமாக காலி செய்ய கூலி படத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் எனவும் “அரசல் புரசலாக” பேசிக்கிறார்களாம்.

கூலி படத்தை விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள், விமர்சகர்களிடம் காசு கொடுத்து எதிர்மறையாக விமர்சிக்க சொல்கிறார்கள் என்று ஒரு புரளியை கிளப்பி விடுகிறார்கள் என திரை வட்டாரதத்தில் பேச்சுக்கள் எழுகின்றனவாம். அரசியல் காழ்புணர்ச்சியோடு நேரிடையாக மோதாமால் இப்படி மறைமுகமா விஜயின் செல்வாக்கை உடைக்கிறார்களாம்.

எது எப்படியோ! இதனால் பாதித்தவர்களும், இவர்கள்தான் பாதிப்பை ஏற்படுத்தினார்கள் என்று குற்றம் சாற்றபட்டவரும் நேரிடையாக இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆகையால் எது உண்மை! எது பொய்! எதை நம்புவது என மக்கள் குளம்பி நிற்கிறார்கள்.