ரோகிணி பிள்ளைக்கு பணத்தை வாரி இறைத்த மனோஜ்.. தத்தியாக இருக்கும் மீனா

Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஷோரூம் இல் இருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்தது ரோகிணி தான். ஆனாலும் அந்த திருட்டுப் பழியை அங்கே வேலை பார்த்த ராஜா ராணி மீது போட்டு விடுகிறார். இதனால் அவர்கள் லாயரை கூட்டிட்டு வந்து மனோஜ் ஷோரூம் இல் மனோஜ் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்.

அதற்கு மனோஜ் நான் எதுவும் பண்ணவில்லை என்று சொல்லிய நிலையில் லாயர் ஆதாரம் இருக்கிறது. நான் போலீசை வர வைக்கிறேன் என்று பயமுறுத்துகிறார். ஆனால் ரோகினி போலீஸ் வந்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தினால் அவங்க கேட்டபடி ஒரு லட்ச ரூபாய் பணத்தை நாங்கள் கொடுக்கிறோம் என்று மனோஜிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விடுகிறார்.

மீதம் பணத்தை மாதம் மாதம் கொடுக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் கிடைத்தது லாபம் என்று ராஜா ராணியும் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். கடைசியில் ரோகினியை நம்பியதால் மனோஜ் அவமானப்பட்டு பணத்தையும் இழந்து வருகிறார். ரோகிணி பெற்ற பிள்ளைக்கு மனோஜ் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து பயன்படுத்துகிறார்.

அந்த வகையில் ரோகிணி, மனோஜ் ஷோரூம் இல் இருந்து எடுத்த பணத்தை யாருக்கும் தெரியாமல் கிருஷை ஒரு தனியாக தங்கி படிக்கும் ஸ்கூலில் சேர்த்து விடுகிறார். இதில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ரோகிணியின் தோழி மகேஸ்வரியை கூட்டிட்டு வந்து கையெழுத்து போட வைக்கிறார். அடுத்ததாக மீனா பூ டெலிவரி பண்ணிட்டு வரும்பொழுது கிரிஷ் பாட்டியை பார்த்துவிட்டு உங்க பேரனையும் மகளையும் எங்கே என்று கேட்கிறார்.

வழக்கம்போல் ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு ரோகிணி அம்மா எஸ்கேப் ஆகிடுவார். அதையும் மீனா தத்தி போல் நம்பிக் கொண்டு ஏமாறுவார். மீனா முத்து மாதிரி ஆட்கள் இருக்க போய் தான் ரோகிணி மாதிரியான நபர் ஏமாற்றிக்கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முடிவே இல்லையா என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணி ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.