கூலியை லியோவுடன் compare பண்ணாதீங்க.. கோபமடைந்த பிரபலம்

Coolie : கூலி படத்தின் மேல் அனைவருக்கும் ஏன் இத்தனை காட்டம் என கேட்கும் அளவிற்கு சமூக வலைதலங்கள் நெகட்டிவிட்டி-யை பரப்பி விட்டார்கள். தனது 50 வருட திரை பயணத்தை அமைதியாக கொண்டாடலாம் என நினைத்த ரஜினியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விட்டனர்.

கூலிக்கு பிறகு நண்பர்கள் கூட உல்லாசமாக இருக்கலாம் என நினைத்த லோகேஷுக்கும் இது பெரிய மனஉளைச்சல். சில தவறான விமர்சனங்கள் எவ்வளவு பெரிய பிரச்சினையாக முடிக்கின்றன. ஆனால் உண்மையில் கூலி படம் இன்று வரை “housefull” என்ற நிலைமையே இருந்து வருகிறது.

கூலியை லியோவுடன் compare பண்ணாதீங்க..

படம் நன்றாக இல்லையென்றால் மக்கள் கூட்டம் கூட்டமாக வரமாட்டார்கள். அதுமட்டுமல்லம்ல A சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு படம் அவ்வளவு மோசமாக இல்லை, குழந்தைகளும் தாராளமாக பார்க்கலாம் என்றும் கூறுகிறீர்கள் பொதுமக்கள்.

இதைப்பற்றி தற்போது திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி ஒன்றில் Goat, லியோ போன்ற படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன. ஆனால் இரண்டு படமுமே மாபெரும் வெற்றியை தேடிதந்தது. ஆனால் கூலிக்கு வரும் விமர்சனம் மிகவும் மட்டமான விமர்சனம்.

கூலி படம் நன்றாகவே உள்ளது. ரிலீஸ் ஆனதிலிருந்து இன்று வரை “Housefull” ஆகவே போய்க்கொண்டிருக்கிறது. படம் அருமையாக உள்ளது, இதற்கு எதிர்மறையாக விமர்சனம் செய்யும் “youtubers”-ஐ பார்த்தாலே எரிச்சலாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கூலியை லியோவுடன் ஒப்பிடாதீர்கள், 75 வயதில் ஒரு மனிதன் தன்னை நம்பி படம் எடுப்பவரை நட்டம் ஆக்கிவிட கூடாது என யோசித்து ரிஸ்க் எடுத்துள்ளார். ரஜினியை நினைத்து பெருமை பட வேண்டும் இந்த படம் கண்டிப்பாக சாதனை செய்யும் என்றும் கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.