முத்துவை சீண்டிப் பார்த்த அருண்.. மோத போகும் சகலைகள்

Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி கிருஷை யாருக்கும் தெரியாமல் போடிங் ஸ்கூலில் சேர்த்து விடுகிறார். இதை மறைந்திருந்து பார்த்த அம்மாவை ரோகிணி பார்த்து விடுகிறார். பிறகு ரெண்டு பேரும் பேசிய நிலையில் ரோகிணி, சொல்லாமல் என் பையனை விட்டுட்டு போன நீ மறுபடியும் ஏன் வந்திருக்கிறாய் என்று கேட்டு திட்டுகிறார்.

அதற்கு ரோகிணியின் அம்மா, நீயும் கிரிஷும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் அப்படி பண்ணினேன். ஆனால் இப்பொழுது யாருமே இல்லை என்று ஏன் அவனை இங்கே சேர்க்க வேண்டும். அவனுக்கு அம்மாவாக நீயும், பாட்டியாக நானும் இருக்கும் பொழுது அவன் ஏன் தனியாக வளர வேண்டும். அவனை என்னிடம் விட்டுவிடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு ரோகினி, இனியும் உன்ன நம்ப தேவை இல்லை. அவன் இங்கே படிக்கட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார். இதனால் விரக்தியில் வந்த ரோகிணி அம்மாவை மீனா பார்த்து விட்டு கிரிசையும் உங்கள் மகளையும் எங்கே என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி அம்மா நான் ஏற்கனவே உன்னிடமும் முத்துவிடமும் நிறைய உண்மையை மறைத்திருக்கிறேன்.

என்னிடம் எதையும் கேட்காத, நான் உன்னிடம் சொல்லாமல் கிருஷை விட்டுட்டு போனதற்கு காரணம் நான் இல்லை என்றால் க்ரிஷ், அவன் அம்மாவுடன் இருப்பான் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் அதுவும் நடக்கவில்லை மற்றபடி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று சொல்லி போய் விடுகிறார். இந்த விஷயத்தை மீனா, வீட்டிற்கு வந்து முத்துவிடம் சொல்கிறார்.

இதற்கிடையில் முத்துவின் நண்பர் செல்வம் பைக்கில் போகும்பொழுது பின்னாடி இருந்த நபர் ஹெல்மெட் போடவில்லை என்று அருள் பிடித்து விசாரிக்கிறார். அப்பொழுது செல்வம், முத்துவின் சகலை என்பதால் பெயர் சொல்லிக் கூப்பிட்டு உரிமையுடன் பேசிவிட்டார். இதை பார்த்து கடுப்பான அருண் பிரச்சனை பண்ணி செல்வத்தின் பைக் சாவியை எடுத்து விடுகிறார்.

உன் நண்பர் முத்துவுக்கு போன் பண்ணி வர சொல்லு பார்த்து பேசலாம் என்று பிரச்சனை பண்ணும் விதமாக முத்துவையும் சீண்டி பார்ப்பதற்கு அருண் பிளான் பண்ணிவிட்டார். இதனால் முத்து, விஷயத்தை கேள்விப்பட்டு வரும் பொழுது சகலைகள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு மோதிக்கொள்ள போகிறார்கள்.