நிலாவிடம் மன்னிப்பு கேட்ட பாண்டியன்.. தம்பியை படாத பாடுபடுத்தும் சோழன்

Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் போலீஸ் ஸ்டேஷனில் பட்ட அவமானத்தை வீட்டில் காட்டும் படி பாண்டியனிடம் கோபத்தை காட்டுகிறார். அதிலும் யார் கேட்டு என்னுடைய பணத்தாய் எடுத்தாய், நான் அதை எதற்காக வைத்திருந்தேன் என்று உனக்கு தெரியாது. என்னிடம் கேட்காமல் என் பணத்தை எடுப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சண்டை போட்டுவிட்டார்.

இதனால் பாண்டியனும் கோபப்பட்டு நான் பணம் கொடுத்து உன்னை வெளியே எடுக்கவில்லை என்றால் நீ போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன்னதால் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது. உடனே நிலா இவர்கள் சண்டையை நிறுத்தும் விதமாக கத்த ஆரம்பித்துவிட்டார். பிறகு சேரன் வந்து சோழனையும் பாண்டியனையும் திட்டியதும் ரெண்டு பேரும் நிலாவிடம் வந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து விட்டார்கள்.

அந்த வகையில் பாண்டியனும் சோழனும் சமாதானமாகி இருவரும் பழைய மாதிரி சந்தோஷமாக பேசுகிறார்கள். இதை பார்த்து நிலா, இவர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்போதுதான் அடிதடி சண்டை போட்டார்கள் அதற்குள் சமாதானமாக ஆகிட்டு இப்படி சிரிச்சு பேசிக்கொள்கிறார்கள் என்று வியந்து பார்த்து சேரனிடம் சொல்லிக் கொள்கிறார்.

அடுத்ததாக பாண்டியன் நீ நிலாவுக்காக வாங்கி கொடுக்க வேண்டும் என்று பைக்கு கேட்டிருந்தாய். ஒரு நல்ல பைக் வந்திருக்கிறது நாளைக்கு போய் பார்க்கலாம் என்று சோழனிடம் சொல்லுகிறார். உடனே சோழனும் சரி என்று சந்தோஷப்பட்டு தூங்கி விடுகிறார். மறுநாள் பாண்டியன் தூக்கத்தில் இருக்கும் பொழுது பாதிலேயே எழுப்பி பைக்கை பார்ப்பதற்கு அவசரப்படுத்தி சோழன் கூட்டு போகிறார்.

அந்த வகையில் நிலாவுக்கு சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக சோழன் பைக் வாங்கிக் கொடுக்கப் போகிறார். ஆனால் இருந்த மொத்த பணமும் போலீஸ் இடம் கொடுத்து விட்டார்கள். இனி பைக் வாங்குவதற்கு எங்கு இருந்து பணம் இருக்கப் போகிறது. சோழனுக்கு ஏற்கனவே ஒரு மாசம் வேலையில்லாமல் போய்விட்டது. இதையெல்லாம் தாண்டி எப்படி நிலாவுக்கு சோழன் எப்படி சர்ப்ரைஸ் பண்ணப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.