காவிரியிடம் கோபமாக சண்டை போட்ட விஜய்.. பாட்டியை திட்டி வெளியே அனுப்பும் சாரதா

mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் காவேரி, அவங்க அம்மா பேச்சை கேட்டுக் தன்னிடம் கோபமாகவும் தன்னை விட்டு விலகுவதாகவும் விஜய் நினைக்கிறார். அதனால் பொறுத்தது போதும் என்று காவிரியை பார்த்த விஜய் கோபமாக பேச ஆரம்பித்து விட்டார். இனி நான் உன்னை பார்க்க வரமாட்டேன், அதே நேரத்தில் என் பிள்ளை உன் வயிற்றில் வளர்கிறது. அதை பத்திரமாக பெற்று எடுக்கும் வரை என் பிள்ளைக்காக உன்னை சந்திப்பேன்.

அதையும் முடிந்தவரை நான் குறைத்துக் கொள்கிறேன், ஆனால் என் பிள்ளையை நல்லபடியாக பெற்றெடுத்து என் கையில் கொடுத்துவிட்டு நீ என்ன வேணாலும் செய். பசுபதியை பார்த்துக்கோ உங்க அம்மா சொத்தை மீட்டுக் குடு என்ன புரட்சி வேண்டுமென்றாலும் பண்ணு. ஆனால் எனக்கு என் பிள்ளை தான் முக்கியம் என்று கோபமாக பேசுகிறார்.

இதைக் கேட்ட காவிரி எதுவும் பேச முடியாமல் அமைதியாகி வீட்டுக்கு விரக்தியுடன் வருகிறார். ஆனால் காவிரியும் விஜய்யும் ஒன்றாக பேசியதை பார்த்தா சாரதா வீட்டில் கோபமாக இருந்த நிலையில் காவிரி வந்ததும் விஜய் இடம் பேசியதற்கு சண்டை போடுகிறார். இதையெல்லாம் தாண்டி விஜய், காவிரி நினைத்து பீல் பண்ணியதால் தனியாக ஒரு நாலு நாளைக்கு எங்கேயாவது போயிட்டு வருகிறேன் என்று தாத்தா பாட்டியிடம் சொல்லி கிளம்பி விடுகிறார்.

இதுதான் சரியான நேரம் என்று ராதா சித்தியும் விஜய்யின் பாட்டியும் வக்கீலை வரவைத்து விவாகரத்து வாங்குவதற்காக பத்திரத்தை லாயரிடம் வாங்கிவிட்டு காவேரி வீட்டுக்கு போகிறார்கள். காவிரியை சந்தித்து பேசிய இவர்கள் பல மாதங்களாக உங்க அம்மா பேச்சைக் கேட்டு இங்கே தான் இருக்கிறாய். இதுக்கு ஒரு முடிவு காண வேண்டும், அதனால் நீ இந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு.

நான் ஒன்னும் சந்தோஷமாக இருக்கிறவங்களை பிரிக்கலை, நீங்க வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பதால் தான் சட்டப்படி பிரித்து விடலாம் என்று நான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு வந்திருக்கிறேன். இதில் கையெழுத்து போடுங்க என்று விஜயின் பாட்டி காவிரியிடம் கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியாகிய காவிரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்த நிலையில் கையெழுத்து போடுவதற்கு தயாராகிவிட்டார்.

ஆனால் நிச்சயம் சாரதா இதற்கு சம்மதிக்க மாட்டார், ஏனென்றால் சாரதாவுக்கு நன்றாகவே தெரியும். காவிரியும் விஜயும் மனசார காதலிக்கிறார்கள் என்று. அதனால் இந்த முறை காவிரிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக விஜய்யின் பாட்டியை திட்டிவிட்டு வெளியே அனுப்பிவிடுவார்.